ETV Bharat / sitara

’ஆஸ்கரைத் தொடர்ந்து பாஃப்டா விருது’ - பிரியங்காவின் அடுத்த பாய்ச்சல் - பாஃப்டா விருதுகளை வழங்கும் பிரியங்கா சோப்ரா

உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருதுகளுக்குத் தேர்வானவர்களின் பட்டியலை முன்னதாக அறிவித்த பிரியங்கா சோப்ரா, தற்போது பாஃப்டா என்று அழைக்கப்படும் 74ஆவது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கும் பிரபலங்களில் ஒருவராகத் தேர்வாகியுள்ளார்.

PeeCee to now be a presenter at BAFTA
பாஃப்டா விருது வழங்கும் பிரியங்கா சோப்ரா
author img

By

Published : Apr 9, 2021, 12:22 PM IST

ஹைதராபாத்: லண்டனிலுள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் ஏப்ரல் 10, 11 தேதிகளில் நடைபெறவிருக்கும் பாஃப்டா விருதை வெற்றியாளர்களுக்கு தானும் வழங்க இருப்பதாக பரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

சிட்டெல் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது லண்டனில் தங்கியுள்ளார். இதையடுத்து 74ஆவது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கத் தேர்வாகியிருப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டாரியில் பகிர்ந்துள்ள அவர், ”வரும் ஞாயிற்றுக்கிழமை பாஃப்டா விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்க இருப்பதில் ஆர்வமாக உள்ளேன். இதை மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PeeCee to now be a presenter at BAFTA
பாஃப்டா விருது வழங்குவது குறித்து தெரிவித்த பிரியங்கா சோப்ரா

பிரியங்காவுடன் இணைந்து நடிகை ரோஸ் பைர்ன், ஆண்டரா டே, அனா கென்ட்ரிக், ரினீ ஸ்லேவீகெர் உள்ளிட்டோரும் விருதுகளை வழங்கவுள்ளனர். பிரியங்கா தவிர அனைவரும் லாஸ் ஏஞ்சலிஸிருந்து வீடியோ மூலம் இணையவுள்ளனர்.

ஏற்கனே ஆஸ்கர் விருதுக்கு தேர்வானவர்களின் பரிந்துரைப் பட்டியலை கணவர் நிக் ஜோனஸுடன் இணைந்து வெளியிட்டார் பிரியங்கா சோப்ரா. இதைத்தொடர்ந்து தற்போது பாஃப்டா விருதுகளை பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளார்.

பிரியங்கா சோப்ரா தயாரித்து, நடித்து கடைசியாக வெளிவந்த படமான த ஒய்ட் டைகரும் பாஃப்டா விருதுகளில் சிறந்த நடிகர், சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய இரண்டு பிரிவுகளில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கணுமா...அப்போ இதை செய்யுங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.