ETV Bharat / sitara

நாய்க்குச் சோறு - ஜாக்குலினுக்கு நேர்ந்த சோகம்! - serial actress jacquline

நீ கிறிஸ்டின் பொண்ணாக இருப்பதால் தான் உன்னை விட்டு வைக்கிறேன் என்று அவர் கூறியது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது என்று சின்னத்திரை நாயகி ஜாக்குலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நாய்க்கு சோறு வைத்ததால் ஜாக்குலினுக்கு நேர்ந்த சோகம்

author img

By

Published : Apr 12, 2020, 12:14 PM IST

சென்னை: நாய் குரைத்ததால் பக்கத்து வீட்டுக்காரர் வந்து தன்னை திட்டியது குறித்து சின்னத்திரை நாயகி ஜாக்குலின் மன வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளராக இருந்து, தற்போது சின்னத்திரை தொடர்களிள் நாயகியாக நடித்து வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். தனது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்துள்ள, இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளன. சென்னையில் வசித்து வரும் ஜாக்குலின் தனது பக்கத்து வீட்டுக்காரர், தன்னை மிகவும் மோசமாக திட்டியதாகவும், அதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

நாய்க்கு சோறு வைத்ததால் ஜாக்குலினுக்கு நேர்ந்த சோகம்
நாய்க்கு சோறு - ஜாக்குலினுக்கு நேர்ந்த சோகம்!

இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “ஊரடங்கு நேரத்தில் பசியாக இருக்கும் தெரு நாய்களுக்கு எனது வீட்டின் கேட் அருகே உணவு வைத்தேன். அந்த உணவை சாப்பிட வந்த தெருநாய்களை நோக்கி, என் வீட்டில் இருந்த நாய்கள் குரைத்தன.

இது என் பக்கத்து வீட்டுக்காரருக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால் என்னைக் கடுமையாக திட்டினார். அதிலும், குறிப்பாக வீடு புகுந்து வந்து சாத்திடுவேன், நீ கிறிஸ்டின் பொண்ணாக இருப்பதால் தான் உன்னைவிட்டு வைக்கிறேன் என்று அவர் கூறியது, எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

சின்ன விஷயத்திற்காக எதற்காக மதத்தை எல்லாம் இழுக்கின்றார்கள் என்று எனக்குப் புரியவில்லை” என்று மிகவும் வருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’கேடு காலத்தில் அனைவருக்கும் உதவ வேண்டும்’- ரவி வர்மா வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.