ETV Bharat / sitara

நடிகை சித்ரா மரணம் தற்கொலைதான்! - நிபுணர் குழு அறிக்கை!

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chitra
chitra
author img

By

Published : Feb 2, 2021, 12:31 PM IST

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் விடுதியில் இருந்து மீட்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த நசரத்பேட்டை காவல்துறையினர், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையடுத்து தன்னை பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக்கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவோ, அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவோ, தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், எந்த குற்றமும் செய்யாத தனக்கு பிணை வழங்க வேண்டும் எனவும் மனுவில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியபின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், சித்ரா தூக்குப்போட்டுதான் தற்கொலை செய்து கொண்டார் என நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பிப்ரவரியில் வெளியாகிறது 'குட்டி ஸ்டோரி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.