பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவரது தற்கொலை குறித்து பிகார் காவல்துறையினர் மற்றும் மும்பை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியாவிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் அமலாக்கத்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 8) ரியாவின் தம்பியான ஷோயிக் சக்ரவர்த்தியிடம் பணம் பரிவர்த்தனை குறித்து 18 மணி நேரம் விசாரணை செய்தனர்.
அதைத்தொடர்ந்து நாளையும் அவரிடம் விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் ரியாவும் விசாரணைக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.