இயக்குநர் புனித் மல்கோத்ரா இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படம், 'ஐ ஹேட் லவ் ஸ்டோரி'. ரொமான்டிக் நகைச்சுவையாக வெளியான இத்திரைப்படத்தில், சோனம் கபூர், குர்ஆன் கான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இது குறித்து நடிகை சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இத்திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகி உள்ளது என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி" என்று பதிவிட்டுள்ளார். சோனம் கபூரின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க: பித்துப் பிடித்து காதலித்ததைத் தவிர வேறெந்த குற்றத்தையும் செய்யவில்லை - வனிதா விஜயகுமார்