ETV Bharat / sitara

செந்நாய் வேட்டைக்காரனாக மாறிய 'கழுகு 2'

திருடர்களாக இருந்து வேட்டைக்காரர்களாக மாறும் இருவரின் வாழ்க்கை சிறகை விரிக்கிறது 'கழுகு 2'.

கழுகு 2
author img

By

Published : Aug 2, 2019, 8:47 PM IST

2012ஆம் ஆண்டு கிருஷ்ணா, பிந்துமாதவி, தம்பி ராமையா, கருணாஸ் என பலர் நடிப்பில் வெளியான படம் 'கழுகு'. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் 'கழுகு 2' வெளியாகியுள்ளது.

கழுகு 2
வேட்டைக்காரர்கள் கிருஷ்ணா - காளி வெங்கட்

திருடி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணா, காளிவெங்கட் ஒரு வழக்கில் காவல்துறையிடம் சிக்கிக்கொண்டனர். அவர்கள் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பிச் செல்கின்றனர். கொடைக்கானலில் உள்ள காடுகளில் மரம் வெட்ட ஒரு குழு டெண்டர் எடுத்த நிலையில் அவர்களுக்கு செந்நாய் பெரும் தொந்தரவாக அமைகிறது. ஒரு வேட்டைக்காரனை தேடும் பணியில் எம்.எஸ் பாஸ்கர் இறங்குகிறார். அப்போது காட்டுப் பகுதியில் இருந்த கிருஷ்ணாவையும், காளி வெங்கட்டையும் வேட்டைக்காரர்களாக எண்ணி அழைத்து வருகிறார். இது கிருஷ்ணாவுக்கும், காளிக்கும் சாதகமாக அமைவதால் அவர்களும் வேட்டைக்கார்களாக நடிக்க ஆரம்பிக்கின்றனர்.

கழுகு 2
பிந்து மாதவியை கண்களால் கைது செய்ய முயற்சிக்கும் கிருஷ்ணா

எம்.எஸ் பாஸ்கரின் மகளாக பிந்துமாதவி வருகிறார். தமிழ்சினிமாவின் விதி மீறமால் பிந்து மாதவியை கிருஷ்ணா கண்டதும் காதல் வையப்படுகிறார். இதற்கிடையில் கிருஷ்ணா காளிவெங்கட் காட்டிற்குள்ளும் மிகப்பெரிய திருட்டு ஒன்றை செய்கிறார்கள். அது என்ன திருட்டு? கிருஷ்ணாவின் காதல் கைகூடியதா? செந்நாய்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் மீதிக்கதை.

கிருஷ்ணா தனது கதாபாத்திரத்திற்கு சரியான உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார். காளிவெங்கட்டுடன் அட்ராசிட்டி செய்வது, காதல் வந்ததும் உருகுவது என தனக்கே உண்டான பாணியில் செய்துள்ளார். காளி வெங்கட் கேரக்டர் கொஞ்சம் சிக்கலான கேரக்டர்தான். படம் முழுக்க வந்தாலும் அவர் நல்லவரா கெட்டவரா என முழுமையாகக் காட்டத் தவறியிருக்கிறார் இயக்குநர்.

கழுகு 2
கிருஷ்ணா - பிந்துமாதவி

‘கழுகு’ முதல் பாகத்தில் மலைகளில் நடக்கும் தற்கொலை உடல் கண்டுபிடிக்கும் குழு என ஆச்சர்யமாக பார்க்கவைத்த இயக்குநர் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் செந்நாய்களை நம்பி சற்றே தடுமாறிவிட்டார். படமும் சுவாரஸ்யமான காட்சிகள் எதுவும் இல்லாமல் துவண்டு தொங்கி நிற்கிறது. தம்பி ராமையா, கருணாஸ் என்னும் மிகப்பெரிய பலமான கூட்டணியாக முதல் பாகத்தை தாங்கி நிற்க, இரண்டாம் பாகம் ஏதுமற்ற காட்சிகளாகக் கடக்கிறது.

கழுகு 2
காதலை வெளிபடுத்தும் முயற்சியல் கிருஷ்ணா

படத்திற்கு இரண்டு பலங்கள் ராஜா பட்டார்ச்சர்ஜீயின் ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ஒரு படம் வெற்றி எனில் அதை அப்படியே விட்டு விடுவதே சாலச்சிறந்தது. அதன் டைட்டிலை மீண்டும் கொண்டுவந்து எதிர்பார்ப்பை உருவாக்கி அதில் உள்ள எதுவும் இதில் இல்லை என சொல்ல வைக்கவே தற்போதைய சினிமா உலகம் மெனக்கெடுகிறதோ என தோன்றுகிறது.

'கழுகு 2' தனது சிறகை விரிக்க சற்றே தயங்கியது போல..!

Intro:கழுகு 2 பட விமர்சனம்

Body:படம் - கழுகு 2
தயாரிப்பு. - மதுக்கூர் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - சத்யசிவா
இசை - யுவன்ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு. - ராஜா பட்டார்ச்சர்ஜீ
நடிகர்கள் - கிருஷ்ணா, பிந்துமாதவி, காளிவெங்கட், எம்எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர்

2012ம் ஆண்டு கிருஷ்ணா, பிந்துமாதவி, தம்பி ராமையா, கருணாஸ் என பலர் நடிப்பில் வெளியான படம் 'கழுகு'. தற்போது அதன் இரண்டாம் பாகமாக மலை கிராம வாழ்க்கையை பின்னணியாக கொண்டு நடக்கும் ஒரு காதல் கதையாக வெளியாகியிருக்கிறது ‘கழுகு 2’.

திருடி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணா மற்றும் காளிவெங்கட். ஒரு திருட்டில் வசமாக சிக்க போலீஸ் பிடித்துச் செல்கிறது. போலீஸை மிரட்டி அவர்கள் துப்பாக்கியையே பிடிங்கிக் கொண்டு ஓட போலீஸ் துரத்துகிறது. இதற்கிடையில் கோடைக்கானலில் ஒரு அடர்ந்தக் காடு அதன் மரங்களை வெட்ட டெண்டர் எடுக்கும் குழுவுக்கு கொடூரமாக வேட்டையாடும் செந்நாய்களைக் தொல்லை. செந்நாய் வேட்டையாட வேட்டைக்காரனை தேடி செல்கிறார் எம்.எஸ். பாஸ்கர். இந்நிலையில் துப்பாக்கியோடு துரத்தப்படும் கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட்டை சிறந்த வேட்டைக்காரர்கள் என்று எண்ணி அவர்கள் இருவரையும் காட்டிற்கு அழைத்து செல்கிறார் எஸ் பாஸ்கர். செனாய் என்றால் என்னவென்றே தெரியாத கிருஷ்ணாவும் காளிவெங்கட் டும் சோறு, தங்க இடம் கிடைப்பதால் மறைந்து வாழலாம் என முடிவெடுக்கின்றனர் கட்டுக்குள் மரம் வெட்டும் குழுவின் தலைவராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கருக்கு மகளாக பிந்துமாதவி இவருக்கும் கிருஷ்ணா விற்கும் இடையே காதல் மலர்கிறது . இதற்கிடையில் கிருஷ்ணா காளிவெங்கட் காட்டிற்குள் ளும் மிகப்பெரிய திருட்டு ஒன்றை செய்கிறார்கள். அந்த திருட்டிலிருந்து தப்பினார்களா ?கிருஷ்ணாவின் காதல் கைகூடியதா சென்நாய்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் மீதிக்கதை.

கிருஷ்ணா திருடனாக , வேட்டையாளனாக, கிராமத்து காரனாக என மிகச்சரியாக கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். பீடியை இழுத்துக்கொண்டு காளிவெங்கட்டுடன் அட்ராசிட்டி செய்வது, காதலைக் கூட உதறி அலட்டாமல் நடந்து செல்வது, அதே காதல் வந்ததும் உருகுவது என கிருஷ்ணா ஸ்கோர் செய்கிறார்.

அமைதியான பெண்ணாக பார்வையிலேயே காதல் உணர்வைக் காட்டுவதும், அதே பெண் தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என தைரியமாகக் கூறி அடி வாங்குவதும் என பிந்து மாதவி அருமை. ஆனால் முகத்தில் சற்றே வயதான தோற்றம் .

காளி வெங்கட் கேரக்டர் கொஞ்சம் சிக்கலான கேரக்டர்தான். படம் முழுக்க வந்தாலும் அவர் நல்லவரா கெட்டவரா என முழுமையாகக் காட்ட தவறியிருக்கிறார் இயக்குநர் சத்யாசிவா.

எம்.எஸ். பாஸ்கர் பாத்திரமும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் பிற்பகுதி காட்சிகளுக்கு பலமாக இருந்திருக்கும். வில்லனாக ஹரிஷ் பிராடி ஒரு சில காட்சிகளில் மிளிர்கிறார்.

‘கழுகு’ முதல் பாகத்தில் மலைகளில் நடக்கும் தற்கொலை உடல் கண்டுபிடிக்கும் குழு என ஆச்சர்யமாக பார்க்க அத்தனை அம்சங்களை வைத்த இயக்குநர் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் செந்நாய்களை நம்பி சற்றே தடுமாறிவிட்டார். ஆனாதை என்பதற்காக காதல் வருவது, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என சொன்னதற்காக காதல் வருவதெல்லாம் சினிமா கிளிசேக்கள்.

படமும் சுவாரஸ்யமான காட்சிகள் எதுவும் இல்லாமல் துவண்டு தொங்கி நிற்கிறது. இரண்டு மணி நேர படம் தான் என்றாலும் எப்போ சார் முடியும் என கேட்கத் தோன்றுகிறது.

தம்பி ராமையா, கருணாஸ் என்னும் மிகப்பெரிய பலமான கூட்டணியாக முதல் பாகத்தை தாங்கி நிற்க, இந்தப் பாகம் ஏதுமற்ற காட்சிகளாகக் கடக்கிறது.

படத்திற்கு இரண்டு பலங்கள் ராஜா பட்டார்ச்சர்ஜீயின் ஒளிப்பதிவு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. காட்டுக்குள்ளே நடக்கும் காட்சிகளையும் மழைகிராம வீடுகள், எதார்த்த வாழ்க்கை என மிகப்பிரமாதமாக காட்சி படுத்தியிருக்கிறார் , அதற்கேற்ப பின்னணி இசையும் கைகொடுத்திருக்கிறது.

முந்தைய பாகத்தின் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்‘ எனத் துவங்கி ‘ஆத்தாடி மனசுதான்’ என இப்போதும் யுவன் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் முக்கிய இடத்தில் உள்ளன ‘கழுகு‘ முதல் பாக பாடல்கள். ஆனால் இந்தப் பாகத்தில் ‘ஏலமல காத்து‘ பாடல் மட்டும் மனதைச் சின்னதாக தொட்டுச் செல்கிறது.

ஒரு படம் வெற்றி எனில் அதை அப்படியே விட்டு விடுவதே சாலச்சிறந்தது. அதன் டைட்டிலை மீண்டும் கொண்டு வந்து எதிர்பார்ப்பை உருவாக்கி அதில் உள்ள எதுவும் இதில் இல்லை என சொல்ல வைக்கவே தற்போதைய சினிமா உலகம் மெனெக்கெடுகிறதோ எனத் தோன்றுகிறது.

Conclusion: ‘கழுகு-2 முதல் பாகம் அளவிற்கு பெரிய சுவாரஸ்யமோ அல்லது ஆச்சர்யங்களோ ஏற்படுத்த தவறி தடுமாறி நிற்கிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.