ETV Bharat / sitara

கிடைத்தது பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்... இவர்கள் தானா? - Big Boss 5 tamil

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பிரமாண்ட தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கியது. இதில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரம் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் கிடைத்துள்ளது. இதோ..

big-boss-5-contestants
big-boss-5-contestants
author img

By

Published : Oct 3, 2021, 5:36 PM IST

Updated : Oct 3, 2021, 6:52 PM IST

சென்னை : பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.

ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பிரமாண்ட தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கியது.

இந்நிகழ்ச்சி தொடர்பான புரோமோக்களும் முன்னதாக வெளியாகி வந்தன. அப்படி வெளியான முதல் புரோமோவில் பிக் பாஸ் சீசன் 5 லோகோவை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து முன்னதாக வெளியான புரோமோவில் போட்டியாளரை காட்டுவது போல் காட்டிவிட்டு, பிறகு கமல் ஹாசன் 'ஐ... காட்டிருவோமா... வாங்க, வந்து பாருங்க... இன்று மாலை 6 மணிக்கு' என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் சூட்டிங் நேற்று நடைபெற்றதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அதன்படி,

இசைவாணி

The Casteless Collective கானா குழுவைச் சேர்ந்த இசைவாணி, இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்கிற தகவல் உறுதியாகி உள்ளது.

இசைவாணி
இசைவாணி

அபிஷேக் ராஜா

4ஆவது போட்டியாளராக யூ-ட்யூப் விமர்சகர் 'ஓபன் பண்ணா' அபிஷேக் ராஜா பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர், இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கண்ணாவின் பாய் பெஸ்டி ஆக நடித்திருப்பார்.

அபிஷேக் ராஜா
அபிஷேக் ராஜா

ராஜு ஜெயமோகன்

'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் கதிரேசன் கேரக்டர் ரொம்பவே பிரபலமானது. இதில் நடித்து வருபவர், ராஜூ ஜெயமோகன். இவரின் முதல் சீரியல் என்ட்ரி 'கனா காணும் காலங்கள்'. மேலும், 'நட்புனா என்னனு தெரியுமா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

ராஜு ஜெயமோகன்
ராஜு ஜெயமோகன்

அக்ஷரா ரெட்டி

அக்ஷரா ரெட்டி பிரபல மாடல் ஆவார். இவர் துபாயில் நடைபெற்ற 'மிஸ் குளோப் 2019' அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து 'வில்லா டூ வில்லேஜ்' என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார்.

அக்ஷரா ரெட்டி
அக்ஷரா ரெட்டி

பவானி ரெட்டி

நடிகை பவானி ரெட்டி 'ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை, பாசமலர்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளம் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

பவானி ரெட்டி
பவானி ரெட்டி

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக பிரியங்கா இருக்கிறார். இவர் 'சூப்பர் சிங்கர், கலக்க போவது யாரு, கிங்ஸ் ஆஃப் டான்ஸ், ஸ்டார்ட் மியூசிக்' போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா தேஷ்பாண்டே

சின்ன பொண்ணு

தமிழ் கிராமிய மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகி, சின்னப் பொண்ணு இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சின்ன பொண்ணு
சின்னப் பொண்ணு

பிரியா ராமன்

'செம்பருத்தி' தொடரில் அகிலாண்டேஸ்வரி காதபாத்திரத்தில் நடித்த பிரியா ராமன், இதில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாக தகவல். இவர் சூர்யவம்சம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

பிரியா ராமன்
பிரியா ராமன்

மிலா

நடிகை ஷகிலாவின் மகள் மிலா, இந்த பிக் பாஸ் சீசன் 5இல் போட்டியாளராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிலா
மிலா

நிழல்கள் ரவி

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக கலக்கி வரும் 'நிழல்கள் ரவி' போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

நிழல்கள் ரவி
நிழல்கள் ரவி

நடிகை கௌசல்யா

90’ஸ் காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், கௌசல்யா. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக நேருக்கு நேர், பிரியமுடன் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கினார். இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கௌசல்யா
நடிகை கௌசல்யா

இமான் அன்ணாச்சி

'குட்டி சுட்டீஸ் மற்றும் சொல்லுங்கண்ணே சொல்லுங்க' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இமான் அண்ணாச்சியும்; பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமான் அன்ணாச்சி
இமான் அன்ணாச்சி

நதியா சாங்

மலேசிய பிரபல மாடல் நதியா சாங், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தனக்கு ஆதரவு தருமாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நதியா சாங்
நதியா சாங்

நமீதா மாரிமுத்து

சென்னையைச் சேர்ந்த பிரபல திருநங்கை மாடல் அழகி நமீதா மாரிமுத்து, பிக் பாஸ் சீசன் 5இல் போட்டியாளராக கலந்து கொள்ளப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

நமிதா மாரிமுத்து
நமீதா மாரிமுத்து

அபிநய் வாடி

அபிநய் பிரபல நடிகர்கள் 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் மற்றும் 'நடிகையர் திலகம்’ சாவித்திரியின் பேரன் ஆவார். 2010இல், தாசரி நாராயண ராவ் இயக்கிய 'யங் இந்தியா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத் துறையில் தனது நடிப்பைத் தொடங்கினார்.

அபிநய் வாடி
அபிநய் வாடி

இதையும் படிங்க : 'ஐ... காட்டிருவோமா.... வாங்க, வந்து பாருங்க...' - பிக் பாஸ் சீசன் 5!

Last Updated : Oct 3, 2021, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.