சுரபி பிலிம்ஸ் - தாய் மூவிஸ் தயாரிப்பில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'வேட்டை நாய்'. இயக்குநர் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ராம்கி, சுபிக்ஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.
'எழுமின்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அந்தப் படத்திற்காகத் தனுஷையும் அனிருத்தையும் பாட வைத்து வெற்றி பாடலை கொடுத்தவர். இவர் தற்போது இரண்டாவது படமாக இசையமைக்கும் 'வேட்டை நாய்' படத்தில் இவரது இசையில் அனிருத்தை பாட வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் முதலில் ' எழுமின்' படத்திற்கு இசையமைத்த போது அதில் தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று அவரை அணுகிக் கேட்டேன். நான் அறிமுக இசையமைப்பாளன், புதியவன் என்பதையெல்லாம் பார்க்காமல் அந்தப் படத்தில் பாடிக் கொடுத்தார்.
அந்த பாடல் பெரிய ஹிட்டானது. அதே போல் அனிருத்தையும் கேட்டேன். அவரும் பாடிக் கொடுத்தார். இரண்டு பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன.
இப்போது 'வேட்டை நாய்' படத்திற்காக அனிருத் பாடிய பாடல் தர லோக்கலாக இருக்கும். இந்தப் பாடலை ராஜகுரு சாமி எழுதியிருக்கிறார்.
அடித்து தூள் கிளப்பும் இந்தப் பாடல் விரைவில் வெளிவர இருக்கிறது. பாடிக் கொடுத்தவுடன் அந்த பாடலை எப்படி வெற்றி பெற வைப்பது என்பதிலும் எனக்கு அனிருத்உதவி செய்தார். அனிருத்திற்கு 'ஆலுமா டோலுமா' போல இந்தப்பாடல் பட்டைய கிளப்பும் ஒரு பாடலாக இருக்கும்.
முதல் படத்தில் தனுஷுடன் இணைந்த நான், மீண்டும் அவரை வைத்துப் பாட வைப்பேன். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும். கையெட்டும் தூரத்தில் தான் அந்த வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்.'
'வேட்டை நாய்' படத்தில் மூன்று பாடல்கள். இரண்டும் மெலடியாக இருக்கும். அனிருத் பாடிய பாடல் அதிரடியாக இருக்கும்" என்று கூறினார்.
'வேட்டை நாய்' படத்தில் அனிருத் பாடிய தர லோக்கல் பாடல் - வேட்டை நாய் பட பாடல்
சென்னை: தனுஷுடன் இணைந்து விரைவில் பணியாற்றுவேன் என இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.