தமிழில் 'ழ' என்ற வார்த்தைக்கு ஈடு இணையே இல்லை எனலாம்! உச்சரிக்கும்போதே அவ்வளவு அழகாக இருக்கும். தற்போது 'ழகரம்' என்ற வார்த்தையை தலைப்பாக வைத்து திரைப்படம் ஒன்று வெளியாகிறது.
புதுமுக இயக்குநர் கிரிஷ் இயக்கும் இந்தப்படத்தில் 'அஞ்சாதே' புகழ் நந்தா நடிக்கிறார். 21ஆம் நூற்றாண்டில் ஒரு அதிசய புதயலைதேடி அலையும் இளைஞர்கள் கூட்டம்தான் படத்தின் கதை. படத்தில் தமிழ் மொழியின் பெருமை பற்றிய முக்கியத்துவம் குறித்தும் பேசப்படுகிறது.
அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படம் தற்போது ஒரு சின்ன வெட்டுகூட இல்லாமல் தணிக்கைக் குழுவிடம் 'யூ' சான்றிதழ் வாங்கியுள்ளது. ஏப்ரல் 12ஆம்தேதி இது உலகம் முழுக்க வெளியாகிறது.