ETV Bharat / sitara

இளையராஜா வரிகளைப் பாடும் யுவன்..! - இளையராஜா வரிகளில் பாடும் யுவன்

இயக்குநர் ஆதிராஜனின் "நினைவெல்லாம் நீயடா" என்ற படத்திற்கு இளையராஜா எழுதிய பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

இளையராஜா வரிகளைப் பாடும் யுவன்..!
இளையராஜா வரிகளைப் பாடும் யுவன்..!
author img

By

Published : Feb 20, 2022, 2:34 PM IST

இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் "நினைவெல்லாம் நீயடா" படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர்.வி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பள்ளிப்பருவக் காதல் கதை

பள்ளிப் பருவக்காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இளையராஜா ஐந்து பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார். கவிஞர் பழநிபாரதி எழுதிய 'மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்...' என்ற பாடலை பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திக் பாடியிருக்கிறார்.

கவிஞர் சினேகன் எழுதிய மூன்று பாடல்களில், 'வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை' என்ற பாடலை ஹரிப்பிரியா பாடியிருக்கிறார். 'வெச்சேன் நான் முரட்டு ஆசை...' பாடலை கன்னட திரையுலகின் முன்னணி பாடகி அனன்யா பட் பாடியிருக்கிறார்.
'அழகான இசை ஒன்று ...' என்ற பாடலை கார்த்திக் - அனன்யாபட் ஜோடி பாடி இருக்கிறது.

இளையராஜா வரிகளில் யுவன் குரல்

இந்த படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கும் பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது கிறங்கடிக்கும் குரலில் பாடிக்கொடுத்திருக்கிறார். இதுபற்றி படத்தின் இயக்குநர் ஆதி ராஜன் கூறும்போது, “இளையராஜாவுடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய பெருங்கனவு இந்த படத்தில் நிறைவேறியிருக்கிறது. பாடல் உருவாக்கத்தின்போது நான் பயந்து கொண்டே இருந்தேன். ஆனால், இளையராஜா உனக்கு என்ன தேவை என்று கேட்டு தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

இப்படத்திற்கு, ஒரு பாடலை நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது, உடனே சம்மதித்து 'இதயமே இதயமே இதயமே.... உன்னைத் தேடித் தேடிக் கழிந்ததிந்த பருவமே பருவமே பருவமே' என்ற என்றப் பாடலை எழுதிக் கொடுத்தார்.

இளையராஜா இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசையைத் தெரிவித்தேன். அவரும் உடனே யுவனை அழைத்துப் பாட வைத்தார். மும்பை பாடகி ஸ்ரீஷா இணைந்து பாடியிருக்கிறார்.

யுவனின் மயக்கும் குரலில் பாடல் அருமையாக வந்திருக்கிறது. இளைஞர்களும், இளம் பெண்களும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக யுவனின் குரலுக்கு மயங்கிக் கிடக்கிறார்கள். இசைஞானியின் இசையில் பல பாடல்களை யுவன் சங்கர் ராஜா பாடியிருந்தாலும் இளையராஜா எழுதிய ஒரு பாடலை யுவன் பாடியிருப்பது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஜன், சினாமிகா நடனமாடும் இப்பாடலை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா வடிவமைக்கிறார். கண்டிப்பாக இந்த பாடல் பல மில்லியன் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடிக்கும் என்பது உறுதி. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது" என்று இயக்குநர் ஆதிராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோடம்பாக்கம் போகும் முன் ஸ்ரீதர் குடும்பத்து 'முகவரி' பாருங்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.