ETV Bharat / sitara

'என் நம்பிக்கை என் உரிமை' யுவன் சங்கர் ராஜா! - Yuvan Shankar Raja in Facebook post controversy related to religion

இசையமைப்பாளர் யுவன் பதிவிட்ட பேஸ்புக் பதிவில் சிலர் மதம் குறித்த எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

yuvan shankar
yuvan shankar
author img

By

Published : Apr 28, 2021, 7:50 PM IST

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், தான் பின்பற்றும் மதம் குறித்த பதிவு ஒன்றை இட்டிருந்தார். அந்தப்பதிவில், அவரைப் பின்தொடரும் ரசிகர்கள் சிலர் அந்தப் பதிவை நீங்கள் நீக்க வேண்டும் என்றும், திரை நட்சத்திரமாக இருக்கும் நீங்கள் இதுபோன்ற பதிவுகளை இடக்கூடாது என்றும் பதிவிட்டிருந்தனர்.

மேலும், சிலர் ஒருபடி மேலே சென்று நீங்கள் பதிவிட்டிருக்கும் கருத்தை பகவத் கீதையில், நீங்கள் காணவில்லையா எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த கருத்துகளுக்கு யுவன் சங்கர் ராஜா, "நான் நம்பும் ஒரு மதம் குறித்துப் பதிவிடுவது எப்படி இன்னொரு மதத்தை மதிக்காமல் போவது ஆகும், திரைப்பிரபலங்களும் தனிமனிதர்களே, அவர்களுக்கும் உரிமைகள் உள்ளன, என் நம்பிக்கை என்உரிமை" எனப் பதிலளித்துள்ளார்.

மேலும், "இனம், மொழி என்பது இரண்டும் வேறு வேறானது. நம்பிக்கை என்பது நமக்குள் இருப்பது. வெறுப்புணர்வைத் தவிருங்கள். உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" எனவும் அவர் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு ஊட்டி வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அண்மைக் காலமாகப் பலரும் முன்வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.