ETV Bharat / sitara

நவரசாவில் வித்தியாசமான வேடத்தில் யோகிபாபு!

பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில், நடிப்பதையே மிகவும் விரும்புவதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 28, 2021, 11:13 AM IST

yogibabu-talks-about-navarrasa-and-his-character
நவரசாவில் வித்தியாசமான வேடத்தில் யோகிபாபு!

சென்னை: பல மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் பங்கேற்பதும், எல்லா வகையான உணர்வுகளை முகத்தில் கொண்டுவரும் திறமையும், ஒவ்வொரு நடிகருக்கும் இருக்க வேண்டிய பொதுப்பண்பு ஆகும். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில், கொடிகட்டி பறந்து வரும் நடிகர் யோகிபாபு, வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் பெரும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். விரைவில் வெளிவரவுள்ள 'நவரசா' ஆந்தாலஜி திரைப்படத்தில், வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்திய மரபில் கூறப்படும், மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது கதைகள் இணைந்த ஆந்தாலஜி திரைப்படமாக 'நவரசா' உருவாகியுள்ளது.

yogibabu talks about Navarrasa and his character

குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க ஆசை

காமெடி நடிப்பு, தற்போதைய குணச்சித்திர பாத்திரங்கள் குறித்து நடிகர் யோகிபாபு கூறியதாவது, " சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாப்பாத்திரங்கள் மிக வலிமையானது. அத்தனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது. ஆனாலும் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில், நடிப்பதையே மிகவும் விரும்புகிறேன்.

நகைச்சுவையில் சாதனை படைத்த , தமிழ் சினிமாவின் மூத்த ஆளுமைகளான நடிகர் நாகேஷ், கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல், பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து, நம் மனைதை கவர்ந்துள்ளனர்.

'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' படத்தில் கவுண்டமணியும் அவர்களும், 'நீர்க்குமிழி' படத்தில் நாகேஸ் அவர்களும் நகைச்சுவைக்கு எதிரான குணச்சித்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். அப்படங்களும் மிகப்பெரும் வெற்றியை பெற்றன.

நவரசாவில் கனமான பாத்திரம் எனக்கு...

அதேபோல் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன். 'நவரசா' ஆந்தாலஜி திரைப்படமே, மனிதனின் உணர்வுகளை மையப்படுத்தி ஒன்பது கதைகளை சொல்லும் திரைப்படம்.

அப்படி ஒரு படத்தில் ஒரு கனமான பாத்திரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி, நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. மேலும், இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.

தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய படைப்பாக, 'நவரசா' உருவாகியுள்ளது. 'ஜஸ்ட் டிக்கெட்ஸ்'நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். 'நவரசா' வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இதையும் படிங்க: தனுஷின் காமன் டிபியை வெளியிட்ட செல்வா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.