நகைச்சுவை நடிகர் யோகிபாபு சமீப காலமாக முன்னணி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தர்மபிரபு, கூர்கா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அந்த வகையில், தற்போது காதல் மோதல் 50 /50 என்ற ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படத்தில் நடித்துவருகிறார். லிபிசினி கிராப்ட்ஸ் மூலம் தயாராகும் இந்தப் படத்தை பிரபல கன்னட இயக்குநர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேகமாக சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்கவுள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.