ETV Bharat / sitara

நான் எப்பவும் முரட்டு சிங்கிள்தான் - பிரேம்ஜி

நான் எப்போதும் முரட்டு சிங்கிள்தான் ஒவ்வொரு படத்துக்கும் எனக்கு பட்டப்பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல்தான் 'இசை காட்டேரி' என்று பெயரை மாற்றிக்கொண்டேன் என்று நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி கூறியுள்ளார்.

Yogi babu and Yashika Aannand 'zombie' audio release
author img

By

Published : Aug 23, 2019, 10:46 PM IST

சென்னை: 'பிக் பாஸ்' புகழ் நடிகை யாஷிகா ஆனந்த், யோகிபாபு நடித்துள்ள 'ஜாம்பி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

காமெடி கலந்த அட்வெஞ்சர் படமாக உருவாகியிக்கும் 'ஜாம்பி' படத்தை புவன் நல்லான் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் நடிகர் பிரேம்ஜி, இயக்குநர் பொன்ராம் நடிகை யாஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து படத்தின் இசையமைப்பாளரான பிரேம்ஜி பேசுகையில்

நான் எப்போதும் முரட்டு சிங்கிள்தான். யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன்.

நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்துக்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. படத்தின் இறுதியில் வரும் சண்டைக் காட்சி மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் எனக்கு பட்டப்பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல்தான் இந்த படத்துக்கு 'இசை காட்டேரி' என்று வைத்துக்கொண்டேன் என்றார்.

நடிகை யாஷிகா ஆனந்த் பேசுகையில்,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் ஒளிப்பதிவாளரின் பணிதான் முக்கியமானது. அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் கேமராவை வைத்து கடினமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அதேபோல் நடன இயக்குநர் எனக்கேற்றவாறு நடனம் அமைத்துக் கொடுத்தார். இரவு பகலாக படப்பிடிப்பு நடக்கும். இருப்பினும் அனைவரும் ஒரு குடும்பம் போல பணியாற்றினோம் என்றார்.

இயக்குநர் பொன்ராம் பேசுகையில்,

இந்தப் படத்தை நானும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் இயலவில்லை. பேய் படத்துக்கு நகைச்சுவை நன்றாக இருந்தால்தான் படம் வெற்றியடையும். அந்த வகையில் இந்தப் படத்தில் பேய் படமாக இல்லாமல் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள்.

இன்று யுடியூப் அனைவரையும் சென்றடைந்திருக்கிறது. என்னுடைய மூன்று படங்களுக்கு விஷ்ணு பணியாற்றியிருக்கிறார். இப்படம் ஒரு புது முயற்சி என்று கூறலாம். இதுபோல அவர்கள் பல படங்கள் எடுக்க வேண்டும் என்றார்.

படத்தின் இயக்குநர் புவன் நல்லான் பேசுகையில்,

யோகிபாபு எனக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஒரு நல்ல கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி. 'ஜாம்பி' மாதிரியான படம் எடுக்கும்போது தொழில்நுட்ப கலைஞர்களின் உதவி பெரும்பங்கு வகிக்கும். அது இந்த படத்தில் எனக்கு நன்றாக அமைந்திருக்கிறது என்றார்.

Intro:‘ஜாம்பி’ இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாBody:நடிகை யாஷிகா ஆனந்த் யோகிபாபு நடித்துள்ள படம் ‘ஜாம்பி’ இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இந்த விழாவில் நடிகர் பிரேம்ஜி இயக்குனர் பொன்ராம் நடிகை யாஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர் இந்த விழாவின் இறுதியில் டிரைலர் மற்றும் இசை வெளியீடு நடைபெற்றது

இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசுகையில்

நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் அமைந்த சண்டைக் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு பட்டப்பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல் தான் இந்த படத்திற்கு 'இசை காட்டேரி' என்று வைத்துக் கொண்டேன் என்றார்.

நடிகை யாஷிகா ஆனந்த் பேசுகையில்,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி தான் முக்கியமானது. அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் கேமராவை வைத்து கடினமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அதேபோல் நடன இயக்குநர் எனக்கேற்றவாறு நடனம் அமைத்துக் கொடுத்தார். இரவு பகலாக படப்பிடிப்பு நடக்கும். இருப்பினும் அனைவரும் ஒரு குடும்பம் போல பணியாற்றினோம். மேக்கப் போடுவதற்கு 3 மணி நேரம் ஆகும் என்றார்.

இயக்குநர் பொன்ராம் பேசுகையில்,

வசந்தும் முத்துக்குமாரும் எனது நண்பர்கள். இப்படத்தை நானும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் இயலவில்லை. பேய் படத்திற்கு நகைச்சுவை நன்றாக இருந்தால் தான் படம் வெற்றியடையும். அந்த வகையில் இந்தப் படத்தில் பேய் படமாக இல்லாமல் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இன்று யுடியூப் அனைவரையும் சென்றடைந்திருக்கிறது. என்னுடைய மூன்று படங்களுக்கு விஷ்ணு பணியாற்றியிருக்கிறார். இப்படம் ஒரு புது முயற்சி என்று கூறலாம். இதுபோல அவர்கள் பல படங்கள் எடுக்க வேண்டும் என்றார்.

Conclusion:புவன் நல்லான் பேசுகையில்,

யோகிபாபு எனக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஒரு நல்ல கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி. 'ஜாம்பி' மாதிரியான படம் எடுக்கும்போது தொழில்நுட்ப கலைஞர்களின் உதவி பெரும்பங்கு வகிக்கும். அது இந்த படத்தில் எனக்கு நன்றாக அமைந்திருக்கிறது.

வீடியோ மோஜோ வில் அனுப்பி உள்ளேன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.