ETV Bharat / sitara

'கூர்கா' யோகிபாபு சிரிக்க வைத்தாரா..? - திரை விமர்சனம் - யோகி பாபு

காவலாளியாக இரவு நேரத்தில் உலாவி கொண்டிருக்கும் கூர்கா இன மக்களின் பாரம்பரியத்தை பற்றியும் அவர்களின் வாழ்க்கையை பற்றி ஜாலியாக, தொய்வு இல்லாமல் மக்களை மகிழ்விக்க வைத்திருக்கும் படம் தான் 'கூர்கா'.

கூர்கா
author img

By

Published : Jul 14, 2019, 4:17 PM IST

Updated : Jul 14, 2019, 4:28 PM IST

தயாரிப்பு - 4 monkeys ஸ்டுடியோ
இயக்கம் - சாம் ஆண்டன்
ஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த்
தொகுப்பு - ரூபன்
இசை - ராஜ் ஆர்யன்
சண்டைப் பயிற்சி - பிசி.
வசனம் - சாம் ஆண்டர்சன், ரூபன், அந்தோணி, பாக்கியராஜ், ஆர்.சவரிமுத்து
நடிகர்கள்- யோகி பாபு, ராஜ் பரத், எலிசா, சார்லி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், ரவி மரியா, மனோபாலா, மயில்சாமி, லிவிங்ஸ்டன், தேவதர்ஷினி.

கூர்கா குடும்பத்தில் பிறந்து தங்கள் குலத் தொழிலான 'கூர்க்கா' வேலை செய்யாமல் எப்படியாவது போலீஸ் வேலை வாங்கியே தீர்வேன் எனத் தீர்மானமாக இருக்கும் கூர்க்கா பகதூர் பாபு (யோகி பாபு). அதீத நம்பிக்கையில் போலீஸ் கனவை நினைவாக்க முயன்றாலும் அவரின் மனதில் இருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உடலில் இல்லாமல் போகவே போலீஸ் வேலைக்கு தேர்வாகாமல் நிராகரிக்கப்படுகிறார். அதே தேர்வில் அண்டர் டேக்கர் என்ற நாயும் தேர்வில் தேறாமல் போக அந்த நாயுடன் பாபுவும் வெளியேற்றப்படுகிறார்.

கூர்கா
கூர்கா

இந்நிலையில் யோகி பாபுவும், அந்த நாயும் ஒரு செக்கியூரிட்டி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள். மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் வேலை கிடைக்கிறது. இதற்கிடையில் ஒரு கும்பல் அந்த மாலை ஹைஜாக் செய்து மக்களைப் பணயக் கைதியாக பிடித்து வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறது. இந்த மர்ம கும்பலிடம் மக்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்பதே மீதி கதை.

யோகி பாபு எப்போதும் போல் வழக்கமான தன்னுடைய காமெடி ட்ரெண்ட் மாறாமல் கவுண்டர் காமெடி, பாடிலாங்குவேஜூடன் கலகலப்பு ஊட்டுகிறார். தன்னையும் கிண்டலடித்து பிறரையும் கிண்டலடிக்கும் பாணி கதையை எங்கேயும் தொங்காமல் எடுத்துச் செல்கிறது. சில இடங்களில் நாடகத்தனமான வசனங்களை தவிர்த்திருக்கலாம். 'அண்டர் டேக்கர் உன் டிஃபன் நின்னுட்டு வருது பாரு' என மனோபாலாவைக் கலாய்ப்பது துவங்கி,' இந்த மூஞ்சி கூர்க்கான்னா நம்புவாங்களா' என்றதும் இதை மூஞ்சின்னு சொன்னாலே நம்ப மாட்டாங்க' பாணி காமெடிகள் ரோப்பிள் ரகம்.

யோகி பாபு -சார்லி
யோகி பாபு -சார்லி

உசேன் போல்ட்டாக வரும் சார்லி, அமெரிக்க எம்பஸி தூதராக வரும் நடிகை மார்க்ரட், ஹரிஸ் ஜெயராஜாக வரும் ரவி மரியா, திடீர் என்ட்ரி கொடுத்து கதைக்கும் மேலும் சிறப்பு செய்யும் ஆனந்த் ராஜ் என படம் முழுக்கவே ஒவ்வொரு கேரக்டர்களும் சிறப்பாக செய்துள்ளனர். இப்படி ரகளைகளுடன் காமெடி படமாக போய்க் கொண்டிருக்கும் கதையில் சீரியஸ் வில்லனாக பயம் காட்டும் ராஜ் பரத் படத்துக்கு பிளஸ். பெரும்பாலும் காமெடி ஹீரோ படங்கள் என்றாலே வில்லனும் கோமாளித்தனமாக இருந்து போரடிப்பார்.

அந்த சினிமா கிளிசேவை உடைத்து காமெடி, சீரியஸ் என இரண்டையும் சரியாக கலந்து அரசியல், அரசு, மீடியா டி.ஆர்.பி, சினிமா, விமர்சனம், சாமியார் என எதையும் விட்டு வைக்காமல் போகிற போக்கில் கவுண்டர்களை அள்ளி தெளித்து அனைவரையும் ஈர்த்து இயக்குநர் சாம் ஆண்டன் தனித்து தெரிகிறார். யார், யாருக்கு என்ன கதாபாத்திரம் சரியாக கொடுத்து வேலை வாங்கியுள்ளார். கதைக்களம் காமெடி படமா.. சீரியஸான காமெடி படமா.. என்பதில் கதையை சீராக கொண்டு செல்ல இயக்குநர் தவறியுள்ளார்.

யோகி பாபு
யோகி பாபு

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. ஒரு மாலுக்குள்ளேயே சுற்றி வரும் இரண்டாம் பகுதி, ஆக்‌ஷன் காட்சிகள், பாடல்கள் என கண்களைக் கவர்கிறது கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு. சீரியஸ் காமெடி என கலந்து செல்லும் கதைக்கு உயிராக நிற்கிறது ராஜ் ஆர்யனின் இசை. அவ்வளவு சீரியஸ் மோடிலும் பன் பட்டர் ஜாம் கேட்பது, யோகி பாபுவின் நாடகத் தனமான பேச்சு பாமில் விளையாட்டு என்பதெல்லாம் டூ மச். அதைக் குறைத்திருக்கலாம். ஆனால் கூர்கா என்றாலே முகம் சுழித்து நாளை வா என சொல்லும் மக்களுக்கு ஆங்காங்கே வகுப்பு எடுப்பதும் சபாஷ் சொல்லத் தோன்றுகிறது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் தங்களைத் தாங்களே கலாய்த்து விமர்சித்துக் கொள்வது ஹாலிவுட் டச்.

சில தொய்வுகள் இருந்தாலும் வசூலில் கூர்காதான் முதலிடம்.

Intro:கூர்க்கா பட விமர்சனம்Body:தயாரிப்பு - 4 monkeys ஸ்டுடியோ
இயக்கம் - சாம் ஆண்டன்
ஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த்
தொகுப்பு - ரூபன்
இசை - ராஜ் ஆர்யன்
சண்டைப் பயிற்சி - பிசி.

வசனம் - சாம் ஆண்டர்சன், ரூபன் ,அந்தோணி ,பாக்கியராஜ் ,ஆர் சவரிமுத்து.

நடிகர்கள்- யோகி பாபு, ராஜ் பரத், எலிசா, சார்லி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், ரவி மரியா ,மனோபாலா, மயில்சாமி, லிவிங்ஸ்டன் ,தேவதர்ஷினி.

துர்கா குடும்பத்தில் பிறந்து தங்கள் குலத் தொழிலான கூர்க்கா வேலை செய்யாமல் எப்படியாவது போலீஸ் வேலை வாங்கியே தீர்வேன் எனத் தீர்மானமாக இருக்கும் கூர்கா பகதூர் பாபு (யோகி பாபு). அதீத நம்பிக்கையில் போலீஸ் கனவை நனவாக்க முயன்றாலும் அவரின் மனதில் இருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உடலில் இல்லாமல் போகவே போலீஸ் வேலைக்கு தேர்வாகாமல் நிராகரிக்கப்படுகிறாள். அதே தேர்வில் அண்டர் டேக்கர் என்ற நாயும் தேர்வில் தேறாமல் போக அந்த நாயுடன் பாபுவும் வெளியேற்றப்படுகிறார்
இந்நிலையில் யோகி பாபுவும் அந்த நாயும் ஒரு செக்கியூரிட்டி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள். மிகப்பெரிய ஷாப்பிங் மஹாலில் வேலை கிடைக்கிறது. இதற்கிடையில் ஒரு கும்பல் அந்த மஹாலை ஹைஜாக் செய்து மக்களைப் பணயக் கைதியாக பிடித்து பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். மக்கள் எப்படி காப்பாற்றப் படுகிறார்கள் என்பதை கூறுகிறது மீதி கதை.

யோகி பாபு அசால்ட்டு நடிப்பில் கலகலப்பு ஊட்டுகிறார்.தன்னையும் கிண்டலடித்து பிறரையும் கிண்டலடிக்கும் பாணி கதையை எங்கேயும் தொங்காமல் எடுத்துச் செல்கிறது. ஆனாலும் சில இடங்களில் நாடகத்தனமான வசனங்கள் தவிர்த்திருக்கலாம்

'அண்டர் டேக்கர் உன் டிஃபன் நின்னுட்டு வருது பாரு' என மனோபாலாவைக் கலாய்ப்பது துவங்கி,

' இந்த மூஞ்சி கூர்கான்னா நம்புவாங்களா' என்றதும் இதை மூஞ்சின்னு சொன்னாலே நம்ப மாட்டாங்க' பாணி காமெடிகள் ரோப்பிள் ரகம்.

உசேன் போல்ட்டாக வரும் சார்லி , அமெரிக்க எம்பஸி தூதராக வரும் மார்கரட் , ஹரிஸ் ஜெயராஜாக வரும் ரவி மரியா , திடீர் என்ட்ரி கொடுத்து கதைக்கும் மேலும் சிறப்பு செய்யும் ஆனந்த் ராஜ் ன படம் முழுக்கவே ஒவ்வொரு கேரக்டர்களும் சிறப்பாக செய்துள்ளனர். அதிலும் படம் செம காமெடியை போய்க் கொண்டிருக்கும் கதையில் சீரியஸ் வில்லனாக பயம் காட்டும் ராஜ் பரத் படத்துக்கு பிளஸ்.

பெரும்பாலும் காமெடி ஹீரோ படங்கள் என்றாலே வில்லனும் கோமாளித்தனமாக இருந்து போரடிப்பார். அந்த சினிமா கிளிசேவை உடைத்து காமெடி, சீரியஸ் என இரண்டையும் சரியாக கலந்து அரசியல், அரசு, மீடியா டி.ஆர்.பி, சினிமா , விமர்சனம், சாமியார் என எதையும் விட்டு வைக்காமல் போகிற போக்கில் நகையாடியது இயக்குநர் சாம் ஆண்டன் வசனத்தை அதீத கவனம் செலுத்தி உள்ளார்.

யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் சரியாக டிசைன் செய்து மனதில் நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன்.இருந்தாலும் கதையை சீராக கொண்டு செல்ல தவறியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. ஒரு மாலுக்குள்ளேயே சுற்றி வரும் இரண்டாம் பகுதி, ஆக்‌ஷன் காட்சிகள் , பாடல்கள் என கண்களைக் கவர்கிறது கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு. சீரியஸ் காமெடி என கலந்து செல்லும் கதைக்கு உயிராக நிற்கிறது ராஜ் ஆர்யனின் இசை.

அவ்வளவு சீரியஸ் மோடிலும் பன் பட்டர் ஜாம் கேட்பது, யோகி பாபுவின் நாடகத் தனமான பேச்சு பாமில் விளையாட்டு என டூ மச் அதைக் குறைத்திருக்கலாம். ஆனால் கூர்கா என்றாலே முகம் சுழித்து நாளை வா என சொல்லும் மக்களுக்கு ஆங்காங்கே வகுப்பு எடுப்பதும் சபாஷ் சொல்லத் தோன்றுகிறது .

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் தங்களைத் தாங்களே கலாய்த்து விமர்சித்துக் கொள்வது ஹாலிவுட் டச்.

Conclusion:கூர்கா - பொழுதுபோக்கு காமெடி, இந்த வார வசூலில் முதலிடம்.
Last Updated : Jul 14, 2019, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.