ETV Bharat / sitara

நிரூப்புடன் எப்போது திருமணம்?; ரசிகருக்கு பதிலளித்த யாஷிகா! - yashika hot news

நிரூப்புக்கும், உங்களுக்கும் எப்போது திருமணம்? என கேட்ட ரசிகருக்கு, நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

நிரூப்புடன் எப்போது திருமணம்?; ரசிகருக்கு பதிலளித்த யாஷிகா!

author img

By

Published : Feb 4, 2022, 7:22 PM IST

கார்த்திக் நரேன் இயக்கிய 'துருவங்கள் பதினாறு' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர், யாஷிகா.

அதன்பின், ’இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ உள்ளிட்ட அடல்ட் திரைப்படங்களில் நடித்தார். இவரது தாராள கவர்ச்சியின் காரணமாக, நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது.

இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. இவ்வாறு பிரபலமானதன் காரணமாக, சின்னத்திரையில் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் பிக்பாஸின் சீசன் 2-வில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவுகளில் சிக்கி கலவையான விமர்சனங்களைப் பெற்றார், கவர்ச்சிப்புயல் யாஷிகா.

கடந்த ஆண்டு கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த யாஷிகா, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தார். இதனிடையே பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக பங்கேற்ற நிரூப் நந்தகுமார், யாஷிகா இருவரும் சமூகவலைதளங்களில் லைவில் இருந்தபோது லிப்லாக் கிஸ் அடித்து மேலும் பிரபலமானார்.

விபத்துக்குப்பின்னர், தற்போது அதிகமாக படவாய்ப்பு ஏதும் இல்லாத காரணத்தால், சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார், யாஷிகா.

அப்போது யாஷிகாவிடம் கலந்துரையாடிய ரசிகர் ஒருவர், நிரூப்பிற்கும் உங்களுக்கும் எப்போது கல்யாணம்? என கேட்டார். இதற்குப் பதிலளித்த யாஷிகா "நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான். தற்போதைக்கு யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை" எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: 'வீரமே வாகை சூடும்' திரையரங்குகளில் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.