யாஷ் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டான திரைப்படம் கேஜிஎஃப். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பை ரசிகர்கள் பல நாள்களாக எதிர்பார்த்திருந்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படத்தின் டீசர் நாளை (ஜன. 08) வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்திருந்தது.
ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும்வகையில் ஒருநாள் முன்னதாகவே படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகத்தில் மாஸான அதிரடி காட்சிகள் அதிகம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தியம் காப்பாற்றப்படுமா என்ற வாக்கியத்தோடு டீசர் நிறைவடைகிறது.
பிரமாண்ட பொருள்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம் முதல் பாகம்போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க... கேஜிஎஃப் 2 டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு