ETV Bharat / sitara

அமெரிக்காவுக்கு முன்பே இந்தியாவில் ரிலீஸ்... உற்சாகத்தில் டிசி ரசிகர்கள்!

author img

By

Published : Dec 3, 2020, 10:17 PM IST

’வொண்டர் வுமன் 1984’ திரைப்படம் டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருநாள் முன்பாக டிசம்பர் 24 அன்றே வெளியாக உள்ளது.

வொண்டர் வுமன் 1984
வொண்டர் வுமன் 1984

ஹாலிவுட்டில் சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், தோர், அயர்ன் மேன் எனப் பல ஆண் சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு பெண் சூப்பர் ஹீரோவை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு வெளியாகி, பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ’வொண்டர் வுமன்’.

2017ஆம் ஆண்டு கேல் கடோட் நடிப்பில் ரிலீஸான ’வொண்டர் வுமன்’ திரைப்படம், வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண் சூப்பர் ஹீரோக்களின் வரிசையில் வெளியாகி ஹிட்டான முதல் திரைப்படம் இதுவாகும்.

இப்படத்தின் இரண்டாம் பாகமான ’வொண்டர் வுமன் 1984’ திரைப்படம் டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 24 அன்றே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரத்து 470 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இந்த ஆண்டின் முதல் பாதியிலேயே முடிவடைந்துவிட்ட நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது.

இந்நிலையில், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் 24ஆம் தேதி இந்தியா முழுவதும் தற்போது இப்படம் வெளியாகிறது. வொண்டர் உமனின் புதிய கவசம், புதிய களம், புதிய வில்லன்கள், காதல் ரீயூனியன், விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் என அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் காத்துள்ளது.

”ஒரு சிறந்த சூப்பர் ஹீரோ மூலம் எடுத்துரைக்கப்படும் சிறந்த கதையாக இப்படம் அமையும். இந்தப் படத்தின் நடிகர்கள் நிஜ வாழ்விலும் சூப்பர் ஹீரோக்கள், ரசிகர்கள் நிச்சயம் இப்படத்தைப் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்” என படம் குறித்து இயக்குநர் பெட்டி ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ்,நார்கோஸ் சீரிஸ்கள் புகழ் நடிகர் பெட்ரோ பாஸ்கல் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ’இந்தியாவில் படம் எடுத்ததில் மகிழ்ச்சி’ - கிறிஸ்டோபர் நோலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.