ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஷெரீஃப்ளெட்சரை 1992ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 1995ஆம் ஆண்டு விவகாரத்து செய்தார். அதன்பின் 1997ஆம் ஆண்டு பிங்கெட் ஸ்மித் என்பவரை வில் ஸ்மித் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு தற்போது ஜோடன்(21) என்ற மகனும், வில்லோ(19) என்ற மகளும் உள்ளனர்.
இதற்கிடையே தந்தையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஃபேஸ்புக் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வில் ஸ்மித், தனது முதல் திருமணம், விவாகரத்து குறித்துப் பேசியுள்ளார். அப்போது, "நான் ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறேன். அது என்னுடைய விகாரத்தைப் பற்றியது.
ஒருவன் சிறந்த கணவனாக இல்லாமல் போகலாம். ஆனால், அதற்காக அவன் சிறந்த அப்பாவாக இருக்க முடியாது என்று அர்த்தமல்ல" என்று வில் ஸ்மித்தின் மனைவி பிங்கெட் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த வில் ஸ்மித், "ஷெரீ, ட்ரோவை (முதல் மனைவியின் மகண்) பொறுத்தவரை அது மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது. நான் வளர்ந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான விஷயம் அந்த விவாகரத்துதான். அதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி. நான் நிறைய காயப்பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.