ETV Bharat / sitara

சீரியஸான விவேக்கை நானே பார்த்ததில்லை - தன்னையே வியந்து பாராட்டிய நடிகர் விவேக்

வெள்ளைப்பூக்கள் படத்தை பார்த்த விவேக் 'நகைச்சுவை நடிகர் விவேக்கிற்குள்ளும் இப்படி ஒரு சீரியஸான ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது' என தன்னையே வியந்து பாராட்டியுள்ளார்.

author img

By

Published : Apr 17, 2019, 5:18 PM IST

Updated : Apr 18, 2019, 2:19 PM IST

நடிகர் விவேக்

அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கியுள்ள 'வெள்ளைப்பூக்கள்' படத்தில் நடிகர் விவேக் ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலராக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. இந்நிலையில் வெள்ளைப்பூக்கள் திரைப்படம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகிறது. மேலும், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் விவேக், 'எனது 32 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் வெள்ளைப்பூக்கள் போன்ற படத்தில் நான் நடித்ததில்லை என பத்திரிகை நண்பர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் முழுவதுமாக என்னுடைய தோற்றம் டயலாக் டெலிவரி எல்லாமே வேறு மாதிரியாக வித்தியாசமாக இருந்தது. இதில் நடித்தபோது இந்த படத்தை நானே வித்தியாசமாக உணர்ந்தேன். நகைச்சுவை நடிகர் விவேக்கிற்குள்ளும் இப்படி ஒரு சீரியஸான ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை பார்க்கையில் பிரமிப்பாக உள்ளது.

இந்தப் படத்தில் நான் வேண்டாம் சத்யராஜ் போன்ற நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன். ஆனால் தயாரிப்பாளர் போலீஸ் வேடத்தில் அவர் அதிகமாக நடித்திருக்கிறார். நீங்கள் நடித்தால் புதுசாக இருக்கும் என்றார். ஏதோ இயக்குநருக்கு நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நகைச்சுவை நடிகரை தவிர மற்றொரு விவேக்கை கொண்டு வரவேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். அது நடந்து விட்டது' என்று அவர் தெரிவித்தார்.

இது போன்ற படங்களில் நடிப்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'கண்டிப்பாக வாய்ப்புகள் வந்தால் இது போன்ற படங்களில் நான் நடிப்பேன். இந்தப் படத்தில் வரும் ருத்ரன் டிஐஜி கேரக்டரை முதன்மைப்படுத்தி பார்ட் 1, பார்ட் 2 எடுக்கலாம் என்ற முயற்சியிலும் உள்ளோம். படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்புகிறேன்' என பதில் அளித்தார்.

 வெள்ளைப்பூக்கள் படத்தின் பார்ட் 2, பார்ட் 3 எடுக்க திட்டம்.... நடிகர் விவேக் சிறப்பு பேட்டி.

திரையுலகில் எனது 32 ஆண்டு கால வாழ்க்கையில் வெள்ளை பூக்கள் போன்ற படத்தில் நான் நடித்ததில்லை என்று கூறினார்கள் . விவேக்கை ஒரு காமெடியனாகவே ஒரு 400 படங்களில் பார்த்தார்கள். இதற்க்கு இடையில் நான் தான் பாலா, எழுமின் ,போன்ற படங்களிலும் நான் நடித்திருந்தேன். அதில் கமர்ஷியல் எலிமென்ட்ஸ் எதுவுமே கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் முழுவதுமாக என்னுடைய தோற்றம் வே ஆஃப் டயலாக் டெலிவரி எல்லாமே வேறு மாதிரியாக வித்தியாசமாக இருக்கிறது. இதற்காக நான் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை சந்தித்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். நடித்தபோது இந்த படத்தை நானே வித்தியாசமாக உணர்ந்தேன். பத்திரிகையாளர்கள் இந்த அளவுக்கு பாராட்டுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. 32 ஆண்டு கால வாழ்க்கையில் இப்படி ஒரு பாட்டு பாராட்டு எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இப்படி ஒரு சீரியஸான ஒரு நடிகர் இருக்கிறார் என்பது பிரமிப்பாகத்தான் இருந்தது தொடர்ந்து இது போன்ற படங்களில் நடிப்பீர்களா?

கண்டிப்பாக இந்த படம் பார்த்த பிறகு இதுபோன்ற வாய்ப்புகள் வரும் தொடர்ந்து இது போன்ற படங்களில் நான் நடிப்பேன். இந்தப் படத்தில் வரும் ருத்ரன் டிஐஜி கேரக்டரை முதன்மைப்படுத்தி தொடர்ச்சியான படங்களாக பார்ட் 1 பார்ட் 2 எடுக்கலாம் என்ற முயற்சியிலும் உள்ளோம். படம் கண்டிப்பாக வெற்றி பெறும் ஆனால் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதைப் பொறுத்து. இதன் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளோம்.

ஒரு கனமான கதாபாத்திரத்தில் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

நானே சொன்னேன் இந்த படத்தில் நான் வேண்டாம் சத்தியராஜ் போன்ற நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் தயாரிப்பாளர் கூறினார் போலீஸ் வேடத்தில் அவர் அதிகமாக செய்து இருக்கிறார் நீங்கள் நடித்தால் புதுசாக இருக்கும் என்றார். ஏதோ டைரக்டருக்கு நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நகைச்சுவை நடிகரை தவிர மற்றொரு விவேக கொண்டு வரவேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம் .அது நடந்து விட்டது என்று நான் நினைக்கிறேன்.

பேட்டி மோஜோவில் அனுப்புகிறேன்
Last Updated : Apr 18, 2019, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.