விரைவில் புதிய படத்துடனும், புதிய தொழில்நுட்ப கூட்டணியுடனும் வருகிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை, 'ஆத்தா'. முன்பே இந்தக் கதையை படமாக்கியிருந்தால் உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலச்சூழ்நிலை ஒன்று உள்ளது.
நடைமுறை நவீன முற்போக்கான இந்தக் கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது 'ஆத்தா'.
இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால், ஆத்தா திரைபடம் கைவிடப்படுகிறது.
இந்நிலையில், புதிய தலைப்புடனும், புதிய தொழில்நுட்ப கூட்டணியுடனும் மிக விரைவில் அறிவிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’அடுத்தவர்களிடம் அறிவுரை கேட்பதை நிறுத்துங்கள்’ - சிம்பு