ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்தியா என்றொரு கருத்தியலே இல்லை என்று நடிகர் சைஃப் அலி கான் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் அவரைக் கடுமையாக சாடி கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், சைஃப் அலி கான் போன்றவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு, குறுகிய கண்ணோட்டத்துடன் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கின்றனர் என்று சாடியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழல் பற்றி கருத்துத் தெரிவித்த நடிகர் சைஃப் அலி கான், இந்தியாவின் வரலாறு பற்றி தனக்கு ஓரளவுக்கு தெரியும் எனவும், ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்தியா எனும் கருத்தியலே இல்லை என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்தினை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
-
Kangana asking Saif Ali Khan a very important question ... over to you Saif ... 🙏https://t.co/7lqyIGeQQi via @YouTube
— Rangoli Chandel (@Rangoli_A) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kangana asking Saif Ali Khan a very important question ... over to you Saif ... 🙏https://t.co/7lqyIGeQQi via @YouTube
— Rangoli Chandel (@Rangoli_A) January 21, 2020Kangana asking Saif Ali Khan a very important question ... over to you Saif ... 🙏https://t.co/7lqyIGeQQi via @YouTube
— Rangoli Chandel (@Rangoli_A) January 21, 2020
தற்போது, இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத், ”இது உண்மை இல்லை. பாரதம் எனும் ஒரு விஷயம் இல்லை என்றால் மகாபாரதம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும்? 5000 வருடங்களுக்கு முன் வியாசரால் எழுதப்பட்ட இந்தக் கதையை என்னவென்று சொல்வீர்கள்? மகாபாரதப் போரில் கிருஷ்ணர் பங்கு பெற்றிருந்தார். மகாபாரதம் உண்மையாகவே நிகழ்ந்தவொரு சம்பவம். மகாபாரதப் போரில் இந்தியாவைச் சேர்ந்த அனைத்து அரசர்களும் பங்குபெற்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஐரோப்பிய ஒன்றியமும் இதுபோன்று பல சிறு சிறு நாடுகளால் ஒன்றிணைக்கப்பட்ட நாடுதான். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையேயான போரில் கிருஷ்ணர் இதைதான் செய்தார். கிருஷ்ணர் வெவ்வேறு பகுதி மன்னர்களை சந்தித்து, போரில் பங்கேற்க விரும்புபவர்களை ஒன்றிணைத்தார்.
கங்கனா பேசியுள்ள இந்த வீடியோவை அவரது சகோதரி ரங்கோலி சண்டெல் ட்விட்டரில் பகிர்ந்ததையடுத்து, இந்த வீடியோ இணையத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: பாலிவுட் பாட்ஷா இப்போ சின்னத்திரையில்!