நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம், ‘ஷெர்னி’. அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில் வித்யா பாலன் வன அலுவலராக நடித்துள்ளார். முதன்முறையாக வன அலுவலராக வித்யா இப்படத்தில் தோன்றியுள்ள நிலையில், பலரும் அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், படம் குறித்து வித்யா பாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இப்படம் காட்டில் அமைக்கப்பட்ட கதை மட்டுமல்ல, அது காட்டைப் பற்றியது. இப்படம் எனக்கு நிறையச் சவால்களைத் தந்தது. வன அலுவலர் என்பதால் மிகவும் எனது கதாபாத்திரம் தனித்துவமாகவும், சுவாரஸ்யமானதாகவும் அமைந்தது.
இந்தப் படத்தின் நாயகி வித்யா வின்சன்ட், மக்களோடு ஒன்றி வாழ விரும்பாதவர். அதனால் அவருக்கு காடு மட்டுமே சரியானதாக அமைந்தது. பொதுவாக நான் நிறைய பேசுவேன். ஆனால், வித்யா வின்சன்ட் கதாபாத்திரம் அமைதியாக நகரும். முதலில் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் பிறகு சரியாகிவிட்டது.
’ஷெர்னி’ படப்பிடிப்பு கடுமையான கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி நடந்தது. அதனால் தான் படக்குழுவினர் ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு ஏற்படவில்லை” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'மாநாடு' ஃபர்ஸ்ட்சிங்கிள்: யுவன், வெங்கட்பிரபுவின் குடும்ப பாடல்