'நாய்கள் ஜாக்கிரதை' படத்தையடுத்து காவல் துறை அலுவலராக சிபிராஜ் நடித்துள்ள படம் 'வால்டர்'. யு. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கஞ்வாலா, சார்லி, முனீஷ்காந்த், சனம் ஷெட்டி, ரித்விகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை 11:11 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
-
#Walter @Sibi_Sathyaraj action cop story not releasing on March 6, as it is yet to be censored. pic.twitter.com/CLFaggS9Bg
— Sreedhar Pillai (@sri50) February 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Walter @Sibi_Sathyaraj action cop story not releasing on March 6, as it is yet to be censored. pic.twitter.com/CLFaggS9Bg
— Sreedhar Pillai (@sri50) February 29, 2020#Walter @Sibi_Sathyaraj action cop story not releasing on March 6, as it is yet to be censored. pic.twitter.com/CLFaggS9Bg
— Sreedhar Pillai (@sri50) February 29, 2020
சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். குழந்தை கடத்தும் வில்லனிடமிருந்து சிபிராஜ் எப்படிக் குழந்தைகளைக் காப்பற்றுகிறார் என்பதே கதை. இப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது.
காரணம் இன்னும் தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழை வழங்கவில்லை. இதனால் தேதி குறிப்பிடாமல் படம் மார்ச் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதே போன்று நேற்று திரிஷா நடிப்பில் வெளியாகவிருந்த 'பரமபதம்' படமும் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதற்கு இன்னும் தேதி குறிப்பிடப்படவில்லை.