ஆனந்த் சங்கர் எழுதி இயக்கி, மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'எனிமி'. இதில் ஆர்யாவும், விஷாலும் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் மிருனாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார். 'எனிமி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
முதலில் எனிமி திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர் முயற்சித்துவருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 'அண்ணாத்த', 'மாநாடு', 'மகான்' படங்கள் தீபாவளி ரேஸில் உள்ள நிலையில், இப்போது 'எனிமி'யும் இணையவுள்ளது. மேலும் 'அண்ணாத்த' படம் தீபாவளி அன்று வெளியாகாது என்றும் ஒரு தரப்பு கூறிவருகிறது.