ETV Bharat / sitara

விஷாலின் ‘சக்ரா’ வெளியாகும் தேதி அறிவிப்பு

author img

By

Published : Mar 6, 2020, 7:38 PM IST

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படம் உழைப்பாளர்கள் தினத்தன்று வெளியாகும் என அதன் இயக்குநர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

சக்ரா டீம்
சக்ரா டீம்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நடிக்கும் படம் 'சக்ரா'. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா கேஸன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சக்ரா விஷால்
சக்ரா விஷால்

தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை ஆனந்தன் இயக்குகிறார். இவர், இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். இப்படம் குறித்து இயக்குநர் ஆனந்தன் கூறுகையில்,விஷாலிடம் கதையை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால், படத்தை நானே தயாரித்து நானே நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.

ஷ்ரத்தா - விஷால் - ரோபோ
ஷ்ரத்தா - விஷால் - ரோபோ

கதாபாத்திரங்கள் எதையும் மாற்ற வேண்டாம், அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். அதுமட்டுமில்லாமல், பெண் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்று குழப்பமாக இருந்தது. அதற்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம். அதேபோல் ரெஜினா கேஸன்ட்ரா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்னணியும் முக்கியத்துவமும் இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது. இந்தப் படம் திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி படம் வெளியாகும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.