நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது உடலைப் பேணிக்காப்பதில் அக்கறை கொண்டவர். நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் இவர், தனது 82ஆவது வயதிலும் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுகிறார்.
உடற்பயிற்சியின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் தன்னால் 82 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது என்று கூறும் இவர், இதை அனைவரும் உணர்வதற்காக புதிதாக யூ-ட்யூப் சேனல் ஒன்றைத் தனது பெயரிலே ஆரம்பித்துள்ளார்.
அதில், ”உடற்பயிற்சி மேற்கொள்வது எப்படி? உடல் பருமன் ஏற்படாமல் கடைபிடிப்பது எப்படி?” போன்ற டிப்ஸ்களை சொல்வது மட்டுமின்றி, அவரே உடற்பயிற்சி செய்தும் காணொலிகளில் விளக்குகிறார். இந்த யூ-ட்யூப் சேனலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.