விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை விக்னேஷ்சிவன் இயக்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
-
With all your blessings we commenced the shoot of #KaathuvaakulaRenduKaadhal ❤❤ #MakkalSelvan @VijaySethuOffl @VigneshShivN @Lalit_SevenScr @anirudhofficial #Nayanthara @Samanthaprabhu2 @gopiprasannaa @proyuvraaj #KRK pic.twitter.com/PEXIeN4m4a
— Seven Screen Studio (@7screenstudio) December 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">With all your blessings we commenced the shoot of #KaathuvaakulaRenduKaadhal ❤❤ #MakkalSelvan @VijaySethuOffl @VigneshShivN @Lalit_SevenScr @anirudhofficial #Nayanthara @Samanthaprabhu2 @gopiprasannaa @proyuvraaj #KRK pic.twitter.com/PEXIeN4m4a
— Seven Screen Studio (@7screenstudio) December 10, 2020With all your blessings we commenced the shoot of #KaathuvaakulaRenduKaadhal ❤❤ #MakkalSelvan @VijaySethuOffl @VigneshShivN @Lalit_SevenScr @anirudhofficial #Nayanthara @Samanthaprabhu2 @gopiprasannaa @proyuvraaj #KRK pic.twitter.com/PEXIeN4m4a
— Seven Screen Studio (@7screenstudio) December 10, 2020
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து ஒருபடம் இயக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அந்தப் படம் தொடங்கப்படாத நிலையில் மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். மற்றொரு கதாநாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
லலித்குமார், விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கரோனா காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இன்று (டிச.10) அதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.