உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. அதிலும் குறிப்பாக படப்பிடிப்பு இல்லாததால், திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்று நடிகர் விஜய் சேதுபதி இன்று ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் விஜய் சேதுபதி முதல் நபராக ஓடி வருவார் என்பதை மிண்டும் நிரூபித்திருப்பதாக அவரது ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். இவரைத் தவிர ரஜினி, சிவகார்த்திகேயன், சூர்யா - கார்த்தி ஆகியோரும் தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கிய ரஜினிகாந்த்