இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ்பாபு, ராஷ்மிகா, விஜயசாந்தி உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சரிலேரு நீகேவரு'. தெலங்கானா, ஆந்திரா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சங்கராந்திக்கு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
80, 90களில் ஆக்ஷன் ஹீரோயின் எனப் பெயர் எடுத்தவர், நடிகை விஜயசாந்தி. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தார்.
இவர் நடித்த ஆக்ஷன் படங்கள், ஹீரோக்களின் ஆக்ஷன் படங்களுக்கு இணையாகப் பேசப்பட்டன. இதனால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்றும் இவர் அழைக்கப்பட்டார்.
-
After 13 years..... What a come back @vijayashanthi_m madam.... MASTER KICK 💥💥💥💥💥🤗🤗🤗🤗 భోగి శుభాకాంక్షలు pic.twitter.com/6X9qXLzclR
— Anil Ravipudi (@AnilRavipudi) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">After 13 years..... What a come back @vijayashanthi_m madam.... MASTER KICK 💥💥💥💥💥🤗🤗🤗🤗 భోగి శుభాకాంక్షలు pic.twitter.com/6X9qXLzclR
— Anil Ravipudi (@AnilRavipudi) January 14, 2020After 13 years..... What a come back @vijayashanthi_m madam.... MASTER KICK 💥💥💥💥💥🤗🤗🤗🤗 భోగి శుభాకాంక్షలు pic.twitter.com/6X9qXLzclR
— Anil Ravipudi (@AnilRavipudi) January 14, 2020
ரஜினிகாந்துடன் இவர் நடித்த 'மன்னன்' திரைப்படம் ரசிகர்களால் ரசிக்கக்கூடிய படமாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் விஜயசாந்தி இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவெளியில் விஜயசாந்தி படப்பிடிப்பில் உள்ள ஒருவருடன் சண்டை செய்யும் காட்சியை வெளியிட்டுள்ள இயக்குநர் 13 வருடங்கள் பிறகும் உங்களது மாஸ்டர் கிக் மாறவில்லை என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதனை அதிகளவில் லைக் செய்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.