தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடப்பில் உருவாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம்இன்று (மார்ச் 29) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இதில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார்.
இப்படம் 3 மணி நேரம் ஓடக்கூடிய பெரியபடம். பல பிரபலங்களுக்கு ஏற்கனவே சிறப்பு காட்சிகள் கண்பிக்கப்பட்டது. படம் நன்றாக இருந்தாலும் படத்தின் நீளம் சலிப்பை ஏற்படுத்தும் என்று கூறியதால் இந்த படம் 20 நிமிடங்கள் கட் செய்யப்பட்டு மூன்று மணி நேரம் படமாக இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் 'சூப்பர் டீலக்ஸ்' விஜய் சேதுபதியின் படம் என்றே படக்குழுவினர் விளம்பரம் செய்தனர். அனைத்து போஸ்டர்கள், ப்ரோமோ வீடியோக்களிலும் அவர் இருந்தார். ஆனால் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதி வெறும் 38 நிமிடங்கள் தான் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியை படம் முழுக்க பார்க்கலாம் என்ற ஆசையில் இருக்கும் ரசிகர்களுக்கு இது நிச்சயம் பேரதிர்ச்சி அளிக்கும் தகவலாக இருக்கும்
முன்னதாக 'சீதக்காதி' படமும் விஜய் சேதுபதி படம் என்றே விளம்பரம் செய்யப்பட்டது. அந்த படத்தில் விஜய் சேதுபதி குறைவான நிமிடங்களில் மட்டுமே வந்தார். ஆனால் அந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகன் போன்று சித்தரிக்கப்பட்டது. இதனால் அப்படம் தோல்வியை தழுவியது குறிப்பிடதக்கது.