ETV Bharat / sitara

புற்றுநோயால் வாடும் தவசிக்கு முன்வந்து உதவும் நடிகர்கள்

author img

By

Published : Nov 17, 2020, 6:12 PM IST

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக பண உதவி கோரியிருந்த நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

vijay sethupathi one lakh fund for thavasi

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவர் உடல் மெலிந்து காணப்படும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் கவலையை ஏற்படுத்தியது. தனது சிகிச்சைக்காக பண உதவி கேட்டு சக நடிகர்களிடம் தவசி கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இதன் பின்னர் நடிகர் சூரி முதற்கட்டமாக ரூ.20,000 நிதியுதவி வழங்கினார். தவசியை கவனித்துக்கொள்ளும் உதவியாளருக்கு மூன்று வேளை உணவு வழங்குவதாகவும உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 25,000 ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளார்.

தவசிக்கு முன்வந்து உதவிய விஜய் சேதுபதி

தற்போது நடிகர் விஜய் சேதுபதி ரூ. 1 லட்சம் நிதியுதவியை நடிகர் சவுந்தராஜன் வழியாக வழங்கியுள்ளார். நடிகர் சவுந்தராஜனும் தனது சார்பில் 10,000 ரூபாயை வழங்கி இருக்கிறார். இதனைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க... புற்று நோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய சூரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.