தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஏனென்றால் இவர் நடிகர், வில்லன் என ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு படங்களில் பொதுவாக நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து 4 விஜய் சேதுபதி படங்கள்
மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என ரவுண்டு கட்டி விஜய் சேதுபதி நடித்து வருகிறார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும், அதனை உள்வாங்கி நடிப்பதில் விஜய் சேதுபதி சிறந்தவர். அடுத்த மாதம் மட்டும் இவரது நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதுவும் திரையரங்கு, டிவி, ஓடிடி என அனைத்து வடிவங்களிலும் இவர் படங்கள் ரிலீஸாகின்றன.
திரையரங்கு, ஓடிடியில் ரிலீசாகும் படங்கள்
இந்நிலையில், 'துக்ளக் தர்பார்' திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதேபோல் மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இது தவிர டாப்சியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'அனபெல் சேதுபதி' அடுத்த மாதம் 17ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இப்படி விஜய் சேதுபதியின் படங்கள் வரிசையாக வெளியாகக் காத்திருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இதையும் படிங்க: பூஜா ஹெக்டேவை ரசித்துப் பார்க்கும் பிரபாஸ்!