ETV Bharat / sitara

சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை - விஜய் சேதுபதி பட நடிகர் கைது! - Chennai district news

சட்ட விரோதமாக திருமண மண்டபத்தில் மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விஜய் சேதுபதி பட நடிகரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

டேவிட்
டேவிட்
author img

By

Published : Jul 16, 2020, 5:17 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கால், சென்னையில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் மதுபாட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக, கே.கே.நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அத்தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்த போது, மின்சார அறையில் சுமார் 500 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்த திருமண மண்டப மேலாளர் டேவிட் (38) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மதுபான பாட்டில்களை தனக்குத் தெரிந்த நபர்கள் இருக்கும் ஊரப்பாக்கம் பகுதியிலிருந்து, பணம் கொடுத்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, டேவிட் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில், இவர் விஜய் சேதுபதி நடித்த 'சங்கதமிழன், 'பில்லா பாண்டி' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி தனுஷ் நற்பணி மன்ற தென்சென்னை மாவட்ட தலைவராகவும் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.