சென்னை: விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள ‘உப்பெனா’ படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்கில் வைரலாகிவருகிறது.
தனக்கு அளிக்கப்படும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வாழ்ந்து பார்ப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. சமீப காலமாக இவர் வில்லன் கதாபத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏகப்பட்ட வில்லன் வாய்ப்புகள் இவரைத் தேடிவருகின்றன.
இந்நிலையில் பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் ’உப்பெனா’ என்ற தெலுங்கு படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி, இதில் கதாநாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் ‘உப்பெனா’ படத்தின் விஜய் சேதுபதி தோற்றத்தைப் படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
-
Makkal Selvan @VijaySethuOffl as RAYANAM 😎 #Uppena #PanjaVaisshnavTej @IamKrithiShetty #BuchiBabuSana @ThisIsDSP @aryasukku @SukumarWritings @adityamusic pic.twitter.com/dUWq3gZISp
— Vishnu Thej (@thisisputta) April 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Makkal Selvan @VijaySethuOffl as RAYANAM 😎 #Uppena #PanjaVaisshnavTej @IamKrithiShetty #BuchiBabuSana @ThisIsDSP @aryasukku @SukumarWritings @adityamusic pic.twitter.com/dUWq3gZISp
— Vishnu Thej (@thisisputta) April 1, 2020Makkal Selvan @VijaySethuOffl as RAYANAM 😎 #Uppena #PanjaVaisshnavTej @IamKrithiShetty #BuchiBabuSana @ThisIsDSP @aryasukku @SukumarWritings @adityamusic pic.twitter.com/dUWq3gZISp
— Vishnu Thej (@thisisputta) April 1, 2020
அதில், விஜய் சேதுபதி சிகரெட் பிடித்தபடி, நாற்காலியில் கால்மேல் கால்போட்டு கெத்தாக அமர்ந்துள்ளார். அப்புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதி வில்லனாக 'விக்ரம் வேதா', 'பேட்ட' ஆகிய இரண்டு படங்களில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: டிக் டாக்கில் கால்பதித்த எமி ஜாக்சன்