ETV Bharat / sitara

எதிர்கால விண்வெளி வீராங்கனைக்கு உதவிய மக்கள் செல்வன் - உதயகீர்த்திகா

உதயகீர்த்திகா எனும் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நினைவாக்க நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றம் மூலம் உதவிசெய்துள்ளார்.

vijay sethupathi
author img

By

Published : Jun 22, 2019, 9:20 PM IST

தேனியை சேர்ந்தவர் உதயகீர்த்திகா. இவர் விண்வெளி ஆய்வில் ஆர்வம் உடையவர். இவர் உக்ரேனில் உள்ள கார்கிவ் விமானப்படை பல்கலைகழகத்தில் ஏர்கிராஃப்ட் மெயிண்டனஸ் தொடர்பான படிப்பை 92.5 விழுக்காடு மதிப்பெண்களுடன் முடித்துள்ளார்.

இவர் 2012,2014ஆம் ஆண்டுகள் முறையே இஸ்ரோவின் மாநில அளவிலான விருதுகளை பெற்றுள்ளார். இவர் தற்போது போலந்து நாட்டில் விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார். இந்த பயிற்சிக்கு உலகளவில் பத்து பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.

இந்தப் பயற்சிக்கு பத்து லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஆனால் உதயகீர்த்திகா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை எட்டாக்கனியாக இருந்தது.

vijay sethupathi
விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்

இதனையடுத்து இவருக்கு உதவ தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

இந்நிலையில், உதயகீர்த்திகாவிற்கு நடிகர் விஜய் சேதுபதி எட்டு லட்ச ரூபாயக்கான காசோலையை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் வழங்கியுள்ளார். அவர் படப்பிடிப்பில் இருப்பதால் தொலைபேசியின் மூலம் உதயகீர்த்திகாவிடம் பேசி அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

Intro:Body:

இந்தியாவின் எதிர்கால விண்வெளி  வீராங்கனையின்  கனவை நிறைவேற்றிய நடிகர் விஜய் சேதுபதி

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா அவர்களின்  விண்வெளி படிப்புக்கான செலவு ரூபாய் 8 லட்சத்தை  விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றம் வழியாக  வழங்கியுள்ளார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.