ETV Bharat / sitara

அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய் சேதுபதி!

author img

By

Published : Apr 26, 2019, 10:01 PM IST

இன்று வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படத்தில் ஐயன் மேன் கதாப்பாத்திரத்திற்கு விஜய் சேதுபதியின் பின்னணி குரல் சற்றும் பொருந்தாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த விஜய்சேதுபதி!

மார்வெல் ஸ்டுடியோஸ் தனது ஒட்டு மொத்த ஹீரோக்களை நடிக்க வைத்து உருவாக்கியுள்ள 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம் இன்று வெளியானது.

இப்படத்தில், 'ஐயன் மேன்' கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதே போல் பிளாக் விடோ கதாப்பாத்திகத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளார். தமிழ் டப்பிங்கிற்கான வசனத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தை திரையில் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள், ஐயன் மேன் கதாப்பாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதியின் குரல் பொருந்தவில்லை என கருத்து தெரிவித்துவருகின்றனர். இருப்பினும் ஆண்ட்ரியாவின் குரல் விடோ கதாப்பாத்திறத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

“அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” படத்தில் எடுபடாத விஜய் சேதுபதியின் குரல் - புலம்பும் ரசிகர்கள்.

தமிழில் மொழிமாற்றம் செய்து  இன்று தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது“அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்”.
இப்படத்தில்‘அய்யன் மேன்’ கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ள இந்த படத்தின் சிறப்பு காட்சி இன்று சென்னையில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.இந்த சிறப்பு கட்சியில், பத்திரிகையாளர்களோடு  ரசிகர்களும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர்.படம் முடிந்து வெளியே வரும் பார்வையாளர்கள், படத்தை வெகுவாக பாராட்டினாலும்  நடிகர் விஜய் சேதுபதியின் பின்னணி குரல் தான் இந்த படத்திற்கு மிக பெரிய மைனஸ் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தார். 

நடிகர் விஜய் சேதுபதி இதற்கு முன்பு பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தாளும், அவருடைய குரல்  ‘அய்யன் மேன்’ கதாபாத்திரத்திற்கு எடுபடவில்லை என்றும் கூறும் ரசிகர்கள், கொஞ்சம் கூட விஜய் சேதுபதி குரல்  அயன் மேனுக்கு பொருந்ததால்  டோனி ஸ்டார்கை திரையில் தோன்றும்போது இருக்கும் கைத்தட்டல், விஜய் சேதுபதி குரல்  வரும் போது பார்வையாளர்கள்  சிரிக்க தொடங்கிவிடுகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்போடு வந்த   நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கூட  என்னடா இது என்று விஜய் சேதுபதியை கழுவி ஊற்றாத குறையாய் புலம்பியப்படியே சென்றனர்  என்பது குறிப்பிட தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.