மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு படங்கள் வரை வெளியாகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி என இவர் இடைவிடாமல் நடித்து வருகிறார்.
இவர் தற்போது தொலைக்காட்சி பக்கம் திரும்பியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை மக்கள்செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.
இதற்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன்.29) தொடங்கியது. அதில் விஜய் சேதுபதி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் பச்சை நிற கோட், கறுப்புக் கண்ணாடி அணிந்து வேற லெவலில் அவர் நடனமாடியுள்ள, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகிறதா 'சார்பட்டா' திரைப்படம்?