ETV Bharat / sitara

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்: 'அனபெல் சேதுபதி' அப்டேட் - நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் 'அனபெல் சேதுபதி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக், வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Annabelle Sethupathi
Annabelle Sethupathi
author img

By

Published : Aug 26, 2021, 5:41 PM IST

அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், விஜய் சேதுபதி, டாப்ஸியை வைத்து இயக்கியிருக்கும் படம் 'அனபெல் சேதுபதி'. இப்படத்தில் ராதிகா, யோகிபாபு, ஜெகதிபாபு, வெண்ணிலா கிஷோர், சுப்பு பஞ்சு, மதுமிதா, சுரேஷ் மேனன், தேவதர்ஷினி, சுரேகாவாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹாரர் கலந்த காமெடி

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில், சுதன் தயாரிக்கிறார். ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜெய்பூரில் நிறைவுபெற்றது.

Annabelle Sethupathi
அனபெல் சேதுபதி படத்தில் ஒரு காட்சி

கெளதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் கிஷோர் இசையமைத்துள்ளார். போன ஜென்மத்தைக் கிளறும் பீரியட் கால ஃப்ளாஷ் பேக் படமாக உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி ராஜாவாக நடிக்கிறார்.

Annabelle Sethupathi
அனபெல் சேதுபதி படத்தில் ஒரு காட்சி

ஓடிடியில் நேரடி வெளியீடு

இந்நிலையில், 'அனபெல் சேதுபதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வெளியாகும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகிறது.

Annabelle Sethupathi
டாப்ஸியுடன் யோகிபாபு

மேலும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 6 Years of Orange Mittai... ஆரஞ்சு மிட்டாய் கதை அப்பாவை ஞாபகப்படுத்தியது - விஜய் சேதுபதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.