கரோனா பரவல் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில், அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், கையுறைகள், முகக்கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இவர்களின் செயலுக்கு அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.