விஜய்குமார் இயக்கி நடித்துள்ள திரைப்படம் உறியடி-2. இப்படத்தை நடிகர் சூர்யா 2டி என்டர்டெயின்ட்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். அரசியல், காதல், சாதி என தற்போது சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை பற்றி பேசக்கூடிய படமாக உருவாகியுள்ளது.
சாதியை முன் வைத்து ஒருவன் அரசியலில் முன்னேறுவதற்காக செய்யும் சதி திட்டங்களை தோலுறித்து காட்டிய படம் உறியடி. 2016இல் வெளிவந்த இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே பாணியில் உறியடி-2 படத்தை விஜய்குமார் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த டீசரில் இளைஞர்கள் அரசியல் களம் காண வேண்டும் என்ற வசனம் இடம் பெற்றிருந்தது உறியடி-2 படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில், படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளதால் உறியடி-2 ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வருகின்ற ஏப்ரல்-5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.