'டாக்டர்' படத்தை இயக்கிய நெல்சன், அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படத்திற்கு 'பீஸ்ட்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'பீஸ்ட்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்திருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது படப்பிடிப்பிற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கவுள்ளது. இதில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்துக்கொள்கின்றனர். இந்த படப்பிடிப்பில் முதல் ஆறு நாட்கள் பாடல் காட்சி படமாக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: மாஸ்டரை பின்னுக்குத் தள்ளி 'பீஸ்ட்' படைத்த புதிய சாதனை