விஜய்தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாக உள்ள '#VD 10' படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது.
’இஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் பூரி ஜெகன்நாத் விஜய்தேவரகொண்டவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக '#VD 10' என்று வைத்துள்ளனர். இந்த படத்தை பூரி கனெக்ட்ஸ், டூரிங் டாக்கீஸ் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் நடிகை ஷார்மி கவுர், கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தாவுடன் இணைந்து தயாரிக்கின்றார்.
இந்தப்படத்தில் நடிகை சார்மி, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதனையடுத்து இன்று மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனை நடிகை சார்மி கவுர் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
இப்படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் முழுமையாக மாறுபட்ட கோணத்தில் விஜய் தேவரகொண்டா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். இக்கதாப்பாத்திரத்திற்காக விஜய்தேவரகொண்டா முழு டயட் மேற்கொண்டு உடலை ஆக்ஷன் ஹீரோ வடிவத்திற்கு மாற்றி வருகிறார்.
தேவரகொண்டா ரசிகர்கள் இதுவரை காணாத வேடத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்திற்காக தாய்லாந்து சென்று அங்குள்ள தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த படம் அவரது சினிமா வாழ்வில் மிக சவாலான கதபாத்திரமாக அமையும். இதற்காக தன் முழு உழைப்பையும் அர்ப்பணிப்புடன் கொடுத்துள்ளார் என்றனர்.