ETV Bharat / sitara

'சிகரெட்டை வைத்து பழத்தை வெட்டுங்க' - டிப்ஸ் கொடுத்த 'துப்பாக்கி' வில்லன் - kollywood news

சிகரெட்டின் வாய்ப் பகுதியைப் பயன்படுத்தி, எலுமிச்சை பழத்தை, நடிகர் வித்யூத் ஜம்வால் வெட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vidyut Jammwal shows how to cut lemon with a cigarette

author img

By

Published : May 19, 2020, 11:57 PM IST

ஊரடங்கு நேரத்தில் திரைப்பிரபலங்கள் தங்களது ஓய்வு நேரப் பணிகள் குறித்து, தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 'துப்பாக்கி', 'அஞ்சான்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள வித்யூத் ஜம்வால் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், 'சிகரெட்டை வைத்து எலுமிச்சைப் பழத்தை எப்படி நறுக்குவது' என்று காணொலியாகப் பதிவு செய்தார்.

'ட்ரெக்கிங் அல்லது வெளியே செல்லும்போது இதுபோன்ற யுக்தி உபயோகமாக இருக்கும். நாம் பல பொருள்களை ஆயுதமாகப் பயன்படுத்தலாம். தற்காப்பு கலைகளும் நமக்கு இதைத் தான் கற்றுக்கொடுக்கின்றன. இந்த யுக்தியை வைத்து நீங்கள் எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பலவற்றை வெட்டலாம். சில நேரம் மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் கூட, நாம் சிகரெட்டுகளைப் பயன்படுத்தலாம்' என்று வித்யூத் ஜம்வால் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க...‘துப்பாக்கி’ பட வில்லனின் 'குதா ஹாஃபிஸ்' - லக்னோவில் படப்பிடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.