ETV Bharat / sitara

கணித மேதையாக மாறுகிறார் வித்யா பாலன்

பாலிவுட் முன்னணி நடிகையான வித்யா பாலன் புதிய படம் ஒன்றில் பிரபல கணித மேதை சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கணித மேதையாக மாறுகிறார் வித்யா பாலன்
author img

By

Published : May 9, 2019, 9:43 AM IST

இந்தப் படத்தை அனு மேனன் இயக்குகிறார். இவர் ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான லண்டன், பாரீஸ், நியூயார்க் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். படத்தை அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் சார்பில் விக்ரம் மல்கோத்ரா தயாரிக்கிறார்.

இப்படம் கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. படம் குறித்து வித்யா பாலன் கூறுகையில்,

'மனித கணினி என்று வர்ணிக்கப்பட்ட சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். பல்வேறு விமர்சனங்களை கடந்து தனது தனித்துவம் மூலம் வெற்றிப்பாதையை அடைந்தவர்.

இந்தியாவின் ஒரு சிறிய நகரத்தில் பிறந்த அவர், உலகே போற்றும் விதமாக கணினி மேதையாக மாறியுள்ளார். பலருக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ள அவரது வாழ்க்கையை திரைக்கு கொண்டுவருவதில் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

படத்தை 2020ஆம் கோடை காலத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டில் தொடங்கப்படவுள்ளதாம்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.