பெங்காலி மொழி படங்கள் மூலம் அறிமுகமானவர், நடிகை வித்யா பாலன். இதையடுத்து இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய கொழி படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இவர் நடிப்பில் இந்த ஆண்டு ’நட்கட்’ என்ற குறும்படம் வெளியானது. இப்படத்தை ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் வித்யா பாலன் இணைந்து தயாரித்துள்ளனர். வட மொழி அம்மா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் தனது நடிப்பை இதில் கச்சிதமாக வெளிக்காட்டியுள்ளார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ’நட்கட்’ குறும்படம் தற்போது ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தனது சமூக வலைத்தளபக்கத்தில் உறுதிசெய்துள்ளார். அதில், ”நட்கட் குறும்படம் எனக்கு நம்பமுடியாத அளவிற்கு நெருக்கமாக உள்ளது. ஏனென்றால் இதில் நான் நடிகை மற்றும் தயாரிப்பாளராக நடந்துகொள்ள வேண்டி இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள தமன்னா