ETV Bharat / sitara

#NKP: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு 'விதி' விலக்கு அல்ல

author img

By

Published : Aug 7, 2019, 10:36 PM IST

'நேர்கொண்ட பார்வை' ட்ரெய்லரில் அஜித் கேட்கும் கேள்வியான 'ஆர் யூ வெர்ஜின்? நீங்க கன்னித்தன்மையோடு இருக்கீங்களா? இல்லியா?' இதே பாணியில் நீதிமன்ற பின்னணியில் 1984ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'விதி' படம் பற்றிய ரீவைண்ட்.

vidhi

தமிழ் சினிமாவில் நீதிமன்றத்தை அடிப்படையாக வெளிவந்த படங்களில் ’விதி’ திரைப்படம் தவிர்க்க முடியாத ஒன்று. இப்படம் தெலுங்கில் வெளியான ‘நியாயம் காவலி’ படத்தின் தமிழ் வெர்ஷன்.

விதி
ஜெய்சங்கர்- பூர்ணிமா ஜெயராம்

'நேர்கொண்ட பார்வை' படத்தில் மூன்று பெண்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைப் போன்று விதி திரைப்படத்திலும் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை மிக அழுத்தமாக இயக்குநர் கே. விஜயன் கூறியிருப்பார். குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளி கூண்டில் நின்றுகொண்டு உணர்ச்சியுடனுடம், ஒருவித பதற்றத்துடனும் தனது தரப்பு வாதத்தை முன் வைப்பது; அதேசமயத்தில் வக்கீலும் சஸ்பென்ஸூடனும், பரப்பரப்பாகவும் வாதிடுவது என அந்த காட்சி ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும்.

விதி
மோகன் - பூர்ணிமா ஜெயராம்

இப்படத்தில் அநீதி இழைக்கப்பட்டவரிடம் நீதிமன்றத்தில் வக்கீல் எப்படி கேள்வி கேட்பார், எப்படியெல்லாம் சாட்சியை மாற்ற முயற்சிப்பார் என்பன உள்ளிட்டவைகளை இயக்குநர் துணிந்து காட்சிப்படுத்தியிருப்பார்.

விதி திரைப்படத்தில் மோகனால் ஏமாற்றப்பட்ட பூர்ணிமா நீதிமன்றத்திற்குப் போவார். அப்போது எதிர்தரப்பு வக்கீல், பூர்ணிமா மேல் தவறு இருப்பதாக வழக்கை திருப்ப முயற்சிப்பார். அந்த வழக்கு பற்றி ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் வரும் பாக்யராஜ் பத்திரிகையாளர் சந்திப்பில் அற்புதமாக பதிலளித்திருப்பார்.

வழக்கு பற்றி பத்திரிகையாளருக்கு விளக்கும் பாக்யராஜ்

'நம்ம நாட்டுல பொம்பளைங்களுக்கு பிரச்னை வர்றது இன்னக்கி ஒன்னும் புதுசு கிடையாது. ராமாயணத்துல ராமர், சீதை மேல சந்தேகப்பட்டு நெருப்புல குதிக்க சொன்னாரு. மகாபாரதத்துல புருஷன்மார்களே பொண்டாட்டிய அடமானம் வச்சு சீட்டு ஆடிப்புட்டாங்க. அந்த மாதிரி ராதாவை ஒருத்தன் ஏமாத்துனது சாதாரண விஷயம்தான்.

ஆனால் அதற்காக அந்தபெண் கோர்ட்டுக்கு போயிருக்குப் பாருங்க, உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம். தனக்கு நேர்ந்த இந்த விஷயம் வேறு பெண்ணுக்கு நடக்கக்கூடாது என்பதற்காகவும், இதுபோல் செய்யும் ஆண்களுக்கு பயம் வர வேண்டும் என்பதற்காகவுமே ராதா கோர்ட்டுக்கு போயிருக்கா.

விதி
விதி பட காட்சி

அது பாராட்டப்பட வேண்டிய விஷயமில்லையா? என கேள்வி எழுப்பியிருப்பார்.

அதன் பிறகு, கட்டிப்பிடிக்கும் போது, ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்துதான் கட்டிப்பிடிக்கிறோம். ஆனால் கர்ப்பம் என்ற கட்டுப்பாடு வரும்போது ஆண் தனியே காணாமல் போய்விடுகிறான். என்னைக்கு அந்த கட்டுப்பாட்டுக்குள் ஆணும் வருகிறானோ அன்றுதான் பிரச்னை தீரும். செக்ஸும் அழகான மேட்டர்தான் அதை நாம் இன்னும் புரிஞ்சிக்கல' எனவும் சாட்டையடி கொடுத்திருப்பார்.

இதில் பூர்ணிமாவுக்கு ஆதரவாக வாதாடும் நடிகை சுஜாதாவுக்கு அற்புதமான கதாபாத்திரம். பெண்ணின் வலி பெண்ணுக்கே தெரியும் என்பதை அழகாக தனது வாத திறமையால் நிரூபித்திருப்பார். 'விதி' திரைப்படத்தின் சுஜாதாவின் ஒரு சாயல்தான் 'தெய்வதிருமகள்' வக்கீல் அனுராதா(அனுஷ்கா).

அதேபோல் எதிர் தரப்பு வக்கீலாக வரும் நடிகர் ஜெய்சங்கர், நடிகை பூர்ணிமா ஜெயராமிடம், மோகன் உங்களை என்ன செஞ்சாரு? கமான்... சொல்லுங்க என கேள்வி கேட்பார்.

விதி
பூர்ணிமாவை விசாரிக்கும் ஜெய்சங்கர்

அதற்கு பூர்ணிமா இறுக்கி கட்டிப்பிடிச்சிட்டாரு என சொல்ல அவரிடம் இருந்து விடுபட முயற்சி செஞ்சீங்களா... அவரு உங்களை எப்பிடி கட்டிபிடிச்சாரு...அப்போ உங்களுக்கு என்ன மாதிரி மனநிலை இருந்தது? என ஒரு பெண்ணிடம் கேட்கக் கூடாத கேள்வியை ஜெய்சங்கர் படுபயங்கரமாக பூர்ணிமாவிடம் கேட்பார்.

அதை பார்க்கும் நமக்கும், அட பாவமே...ஒரு பெண்ணிடம் இப்படியெல்லாமா கேள்வி கேட்பாங்க என்ற மனநிலை வரும். இப்படி பெண்களுக்கு எதிராக ஏற்படும் அநீதிகளை களைந்து நீதியை நிலைநாட்டிய படம் அப்போதைய காலக்கட்டத்தில் பெரும் வெற்றியையும் வசூலையும் வாரிகுவித்தது.

இப்படி தமிழ் சினிமாவில் நீதிமன்றத்தை முக்கிய கருவாக வைத்து எடுக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் வெற்றியையும் பெறும்.

ஏனெனில் அந்த காலக்கட்டத்தைவிட தற்போதைய நவீன காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. பெண்களும் அதற்கு எதிராக துணிந்து போராட ஆரம்பித்திருக்கின்றனர். பெண்கள் அடிமையாக இருந்த அக்காலக்கட்டத்திலேயே ’விதி’ திரைப்படம் வெளிவந்து தமிழ் சினிமாவின் பெண்கள் கதாபாத்திர விதியை மாற்றியதுபோல், தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படமும் வெளியாகி மேலும் பெண்களுக்கு நிமிர்ந்த நன்னடையையும், நேர்கொண்ட பார்வையையும் தரும் எனநம்புவோம்...

Intro:Body:

vithi movie article 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.