ETV Bharat / sitara

பிஎம்டபிள்யூ பைக் வாங்கிய வெற்றிமாறன்: விலை எவ்வளவு தெரியுமா? - vetrimaran bmw bike price

தேசிய விருதுபெற்ற இயக்குநரான வெற்றிமாறன் புதிதாக பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி (R Nine T) என்னும் ஸ்க்ராம்ப்ளர் பைக் ஒன்றினை வாங்கியுள்ளார். தற்போது அது தொடர்பான காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த பைக்கின் விலை, சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களைச் செய்தியில் காணலாம்.

வெற்றிமாறன் பைக் வாங்குவது தொடர்பான காணொலி

author img

By

Published : Feb 13, 2022, 7:36 PM IST

Updated : Feb 13, 2022, 8:51 PM IST

தனுஷின் நடிப்பில் வெளியான 'பொல்லாதவன்' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

ஆடுகளம், அசுரன் ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருதுகளையும் வென்றுள்ளார் வெற்றிமாறன். நடிகர் சூரி, விஜய் சேதுபதி கூட்டணியில் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

பிரமிக்க வைக்கும் விலை

வெற்றிமாறன் பைக் வாங்குவது தொடர்பான காணொலி

இந்நிலையில் வெற்றிமாறன் புதியதாக பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி (R Nine T) என்னும் ஸ்க்ராம்ப்ளர் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் சென்னை ஆன் ரோடு விலை 23 லட்சம் ரூபாய். பொதுவாக சூப்பா் பைக்குகள் ஓட்டும்போது, இன்ஜின் சிசி அதிகம் என்பதால் ஓட்டுபவர்கள், பில்லியன் ரைடர்களின் கால்களில் இன்ஜின் சூடு பதம்பார்க்கும்.

இந்த பைக்கின் முக்கியமான சிறப்பே இதிலுள்ள பாக்ஸர் இன்ஜின்தான். பைக்கின் எதிர்த் திசையில் இந்த இன்ஜின் மவுன்ட் செய்யப்பட்டிருப்பதால் காலில் சூடு வைக்காது. டர்ட் மோட் (Dirt Mode) என்னும் ஆப்ஷனுக்காகவே இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளா்கள் இருக்கிறாா்கள். எப்படிப்பட்ட மோசமான சாலைகளிலும் இது சுத்தமாக வேலை செய்யும்.

இதன் ASC (Active Stability Control), DTC (Dynamic Traction Control) வளைத்து நெளித்து ஓட்ட செம ஃபன்னாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும். இரவு நேரங்களில் இதன் அடாப்டிவ் ஹெட்லைட்ஸின் இலுமினேஷன் செம பவராக இருக்கும்.

அஜித் டூ வெற்றிமாறன்

இதன் ஹீல் ஆங்கிள் 7 டிகிரி, 25 டிகிரிகளில் பைக்கைச் சாய்க்க ஏற்றவாறு ஹெட்லைட்ஸும் தானாகத் திரும்பிக் கொள்ளும். இதன் டபுள் எக்ஸாஸ்ட்டிலிருந்து வரும் பீட், சத்தியமாக ஸ்க்ராம்ப்ளர் சத்தம்தான். டாப் ஸ்பீடான 200 கிமீ வேகத்தில் இதன் பீட் சத்தம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். 'வலிமை' படத்தில் அஜித் ஓட்டியதால் மிகவும் பிரபலமான இந்த பைக்கையே தற்போது வெற்றிமாறன் வாங்கியுள்ளார்.

ஷோரூமில் பைக்கை வாங்கி வெற்றிமாறன் மகிழ்ச்சியடையும் காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. பிஎம்டபிள்யூ பைக்கை சொந்தமாக்கிய வெற்றிமாறனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் 'விடுதலை' திரைப்படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்யாவின் 'கேப்டன்' படப்பிடிப்பு நிறைவு

Last Updated : Feb 13, 2022, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.