ETV Bharat / sitara

தல அஜித் பாணியில் 'வாழு வாழ விடு' - இயக்குநர் வெங்கட் பிரபு வேண்டுகோள்

இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள 'ஆர்கே நகர்' படத்தை வெளியிட விடாமல் தீய சக்திகள் செயல்பட்டுவருவதாக வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு
author img

By

Published : Apr 9, 2019, 4:35 PM IST

இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள படம் 'ஆர்கே நகர்'. இந்தப் படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் நேரம் என்பதால் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஒரு சிலர் தடையாக இருக்கின்றனர். இதனால் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு தனது மனவருத்தத்தை தெரிவித்து பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில், "என்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனியும், பத்ரி கஸ்தூரியின் சர்தார் என்டர்டெய்ன்மென்ட் கம்பெனியும் இணைந்து தயாரித்த படம் 'ஆர்கேநகர்'. சரவண ராஜன் இயக்கி நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்த இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் முடிந்து ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாக இருந்தது. எதிர்பாராத விதமாக சில பல காரணங்களால் தடைபட்டது. நாங்கள் செய்யாத தவறுக்கு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம் .

இயக்குநர் வெங்கட்பிரபு

தேர்தலுக்குப் பிறகுதான் இந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள். இது யார் என்று, நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நான் கூற விரும்புவது எங்களுக்கு சப்போர்ட் கொடுங்க. இந்தப் பிரச்னை விரைவாக முடிந்துவிடும். இந்தப் படத்தில் அரசியல் இல்லை; யாரையும் குறிப்பிட்டு இந்தப் படம் எடுக்கவில்லை. இது ஒரு ஜனரஞ்சகமான படம். யாரும் இதைப் பார்த்து குழப்பமடைய வேண்டாம்.

அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்... அது தல அஜித் பாணியில் 'வாழு வாழ விடு' என்பதே" என பேசியிருந்தார். இவரது இந்தப் பேச்சுக்கு சினிமா ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

வாழு வாழ விடு - இயக்குனர் வெங்கட் பிரபு வேண்டுகோள்

இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில்  நடிகர் வைபவ் நடித்துள்ள படம் ஆர்கே நகர் . இந்தப் படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, தேர்தலுக்கு பிறகுதான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறுவதாகவும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 

என்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனியும் பத்ரி கஸ்தூரி அவர்களின் சர்தார் என்டர்டைன்மென்ட் கம்பெனியும் இணைந்து தயாரித்த ஆர்கேநகர் படம். ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

 சரவண ராஜன் இயக்கி நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்து பட பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது. எதிர்பாராத விதமாக சில பல காரணங்களால் தடைபட்டது நாங்கள் செய்யாத தவறுக்கு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம் .

தேர்தலுக்குப் பிறகுதான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள். இது யார் என்று நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நான் கூற விரும்புவது எங்களுக்கு சப்போர்ட் கொடுங்க இந்தப் பிரச்சனை சீக்கிரமாக முடிந்து விடும்.

 இந்த படத்தில் அரசியல் இல்லை யாரையும் குறிப்பிட்டு இந்த படம் எடுக்கவில்லை. இது ஒரு ஜனரஞ்சகமான படம் யாரும் இதைப் பார்த்து குழப்பமடைய வேண்டாம். அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் அது "தலை" பாணியில் வாழு வாழ விடு என்று அந்த காணொளியில் அவர் கூறியுள்ளார்

வைபவ், சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அரண்மனை 2 ,ஈசன், மேயாத மான் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்டை படத்தில் ஒரு காட்சிக்கு மட்டும் வந்து செல்வார். தற்போது இவரது நடிப்பில் ஆர்கேநகர் படம் வெளியாக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.