விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'. ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்நிலையில் 'வீரமே வாகை சூடும்' படத்தின் டீசர் வெளியான ஐந்து மணி நேரத்தில் யூ-ட்யூப் தளத்தில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துவருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு குடியரசு நாளான ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப் படக்குழுத் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: Mohan Re-entry: மீண்டும் 'மைக் மோகன்'!